நேத்திரப் பூண்டின் மருத்துவப் பயன்கள்:
மூலிகை முற்றம் சார்பாக, நெல்லை மாவட்ட அறிவியல் மையத்தில் உலகத் தமிழ் மருத்துவக் கழகத் தலைவர் மரு.பி.மைக்கேல் செயராசு அவர்கள் நேத்திரப்பூண்டு மூலிகை பற்றி சிறப்புரை ஆற்றினார். அவர் பேசியதிலிருந்து....
நேத்திரப் பூண்டு நான்கு நான்கு இலைகளாக இருக்கும். மழை வளம், தண்ணீர் வளத்தை பொருத்து இது உயரமாக வளரும்.சென்னைக்கு அருகிலுள்ள திருக்கழுக்குன்றத்தில் தேற்றான் மரங்களுக்கு நடுவில் பெரிய பெரிய இலைகளைக் கொண்டு வளர்வதை நாம் கண்கூடாக பார்க்கலாம். கன்னியாகுமரி மாவட்டத்தில் இதை
‘அற்றலை பொருத்தி’ என்று பேச்சு வழக்கில் கூறுகின்றனர்.
இதன் தண்டை ஒடித்து விட்டு மீண்டும் பொருத்தினீர்கள் என்றால் பொருந்திக் கொள்ளும். அதனால் இந்தப் பெயர் வந்துள்ளது. இதிலுள்ள பசைச் சத்தே இதற்கு காரணம். ஆனால் உண்மையான பெயர் ‘அருந்தலை பொருத்தி’. இதன் பெயரிலேயே இதன் பயன் உள்ளது. நேத்திரம்= கண். நேத்திரப் பூண்டு தைலம் கண் நோய்களுக்கு மட்டுமல்ல வயிற்றுப்புண்,ஒற்றைத் தலைவலி,செரிமானக்கோளாறு, கிராணி போன்ற நோய்களுக்கு வழங்கலாம்.
தைலம் செய்முறை...
நல்லெண்ணெய்...1 லிட்டர்
நேத்திரப்பூண்டு... அரை கிலோ
தும்பை... 100 கிராம்
கரிசாலை... 100 கிராம்
பொன்னாங்காணி... 100 கிராம்
கற்றாழை... 100 கிராம்
மேலே கூறிய மூலிகைகளிலிருந்து சாறெடுத்து நல்லெண்ணெயுடன் சேர்த்து காய்ச்சி
மணல் பதம் வந்தவுடன் இறக்கி மேற்கூறிய நோய்களுக்கு மருத்துவரின் ஆலோசனைப்படி பயன்படுத்தலாம்.நேத்திரப் பூண்டு பற்றிய குறிப்புகள் சித்த மருத்துவ நூற்களில் காணக்கிடைக்கவில்லை.
அடுத்த கட்டுரை :
No comments:
Post a Comment