orange-peel-to-help-fix-infections-on-the-face முகத்தில் ஏற்படும் தொற்றுக்களை சரிசெய்ய உதவும் ஆரஞ்சு தோல் !! - Health Tips & Hair Tips

Latest Health Tips and Hair tips

Friday 3 September 2021

orange-peel-to-help-fix-infections-on-the-face முகத்தில் ஏற்படும் தொற்றுக்களை சரிசெய்ய உதவும் ஆரஞ்சு தோல் !!

Fruit Skin

முகத்தில் ஏற்படும் தொற்றுக்களை சரிசெய்ய உதவும் ஆரஞ்சு தோல் !!


ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் C மற்றும் ஆண்டிஆக்ஸைட் அதிகளவு உள்ளதால் இவற்றின் தோலை முக அழகிற்கு பயன்படுத்தும் போது சருமம் பொலிவுடனும், வெண்மையாகவும் காணப்படும்.
 

ஆரஞ்சு பழத்தோல் அதிகளவு நோய் எதிர்ப்பு சக்தி உள்ளதால், இவற்றை நம் முகத்தில் பேக்காக போடும்போது முகத்தில் ஏற்படும் தொற்றுக்களை சரி செய்ய  உதவுகிறது. 
 
ஆரஞ்சு பழத்தோலை காயவைத்து பொடி செய்த ு வைத்து கொள்ளவும். ஒரு பவுலில் இரண்டு ஸ்பூன் ஆரஞ்சு தோலை எடுத்துக்கொள்ளவும், அதனுடன் ஒரு ஸ்பூன் பசும்பால் மற்றும் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் ஆகியவற்றை ஒன்றாக கலந்து, முகத்தில் தடவி மசாஜ் செய்து 20 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரால்  முகத்தை கழுவவும்.
 
இந்த முறையை வாரத்தில் மூன்று முறை செய்து வந்தால், சருமத்தில் ஏற்படும் கரும்புள்ளிகள், எண்ணெய் பசை கொண்ட சருமம், மேடுபள்ளம் கொண்ட சருமம் மற்றும் பருக்கள் ஆகிய பிரச்சனைகளை சரி செய்யும். அதுமட்டும் இன்றி சருமத்தை எப்போதும் ஈரப்பதத்துடன் வைத்திருக்கும். இதனால் சருமம் எப்பொழுதும்  பொலிவுடன் காணப்படும்.
 
ஆரஞ்சு தோலை அரைத்து கொள்ளவும். பின்பு வேப்பிலையை அரைத்து பேஸ்ட்டாக வைத்து கொள்ளவும். ஒரு ஸ்பூன் ஆரஞ்சு தோல், இரண்டு ஸ்பூன் வேப்பிலை பேஸ்ட் மற்றும் சிறிதளவு தேங்காய் எண்ணெய் ஆகியவற்றை ஒன்றாக கலந்து இந்த கலவையை சருமத்தில் தடவி மசாஜ் செய்து, 15 நிமிடம் வரை காத்திருந்து பின்பு குளிர்ந்த நீரால் சருமத்தை கழுவ வேண்டும்.
 
இவ்வாறு வாரத்தில் இரண்டு முறை செய்து வந்தால் சருமத்தில் ஏற்படும் எண்ணெய் பசை பிரச்சனை சரியாகும். மேலும் சருமத்தை எப்போதும் அழகாகவும்  பொலிவுடனும் வைத்திட இந்த முறை மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த முறையை வாரத்தில் இரண்டு அல்லது மூன்று முறை செய்து வரலாம்.


No comments:

Post a Comment