simple-natural-medical-tips-to-get-rid-of-pimples-on-the-face முகத்திலுள்ள பருக்களை போக்கும் எளிய இயற்கை மருத்துவ குறிப்புகள் !! - Health Tips & Hair Tips

Latest Health Tips and Hair tips

Thursday, 2 September 2021

simple-natural-medical-tips-to-get-rid-of-pimples-on-the-face முகத்திலுள்ள பருக்களை போக்கும் எளிய இயற்கை மருத்துவ குறிப்புகள் !!

முகத்திலுள்ள பருக்களை போக்கும் எளிய இயற்கை மருத்துவ குறிப்புகள் !!


தினந்தோறும் 30 நிமிடங்களாவது உடற்பயிற்சி செய்யுங்கள். உடற்பயிற்சி செய்வதால், தேவையற்ற சதைகள் குறைந்து, எடை குறைவதுடன், பருக்களால் ஏற்பட்ட  தழும்புகளும் மறையும்.

கொஞ்சம் டீ-ட்ரீ ஆயிலை எடுத்துக் கொண்டு. பாதிக்கப்பட்ட இடங்கள் மீது தடவுங்கள். ஒரு இரவு முழுவதும் அப்படியே இருக்கட்டும். காலையில் எழுந்து தண்ணீர் கொண்டு அலசுங்கள். இது முகத்தில் தடிப்புகளை யும், சிவந்த தோலையும் சரிசெய்யும்.
 
வெளியில் சென்று வீடு திரும்பியவுடன் குளிர்ந்த நீர் கொண்டு, முகத்தை நன்கு கழுவி வாருங்கள். இது முகத்தில் படிந்துள்ள அழுக்குகளை நீக்குவதுடன், படிந்துள்ள பாக்டீரியாக்களையும் நீக்கும்.
 
தினந்தோறும் மேக் அப் போட்டதை களைந்துவிட்டு, முகத்தை நன்றாகக் கழுவி விடுங்கள். ஒரே வகையான அழகு சாதனங்களைத் தொடர்ந்து பயன்படுத்துவதைத்  தவிர்த்திடுங்கள். முக்கியமாக எண்ணெய் சார்ந்த மேக்அப் சாதனங்களைத் தவிர்த்திடுங்கள்.
 
முகத்திலுள்ள பருக்களையும் தழும்புகளையும் நினைத்துக் கவலைபட்டுக் கொண்டு தொட்டுத் தொட்டு பார்க்காதீர்கள். அப்படிச் செய்தால், அவை பெருகும். அதோடு, நகம் பட்டு அவை செப்டிக் ஆகக்கூடும். எனவே பருக்கள் மீது விரல்களைக் கூடப் படவிடாதீர்கள். குறிப்பாக பருக்களை பிதுக்காதீர்கள்.
 
சிறிது சமையல் சோடாவை எடுத்துக் கொண்டு, அதனுடன் சிறிதுதண்ணீரை சேர்த்து பசைபோல கலந்து, இதனை முகத்தில் தடவி, 20 நிமிடங்கள் இருக்க  விடுங்கள். பிறகு சற்று வெதுவெதுப்பான நீரில் முகத்தை நன்கு கழுவிடுங்கள். இதனாலும் பருக்களும், தழும்புகளும் மறையக்கூடும்.


No comments:

Post a Comment