some-tips-to-protect-the-health-of-the-body-through-natural-foods இயற்கை உணவுகளில் மூலம் உடல் ஆரோக்கியத்தை காக்க சில டிப்ஸ்.....!! - Health Tips & Hair Tips

Latest Health Tips and Hair tips

Thursday 2 September 2021

some-tips-to-protect-the-health-of-the-body-through-natural-foods இயற்கை உணவுகளில் மூலம் உடல் ஆரோக்கியத்தை காக்க சில டிப்ஸ்.....!!

Health

இயற்கை உணவுகளில் மூலம் உடல் ஆரோக்கியத்தை காக்க சில டிப்ஸ்.....!!


தினசரி ஒரு வெங்காயத்தை பச்சையாக உண்டு வந்தால் இரத்தம் சுத்தமாகும். இருமல், சளி நீங்கும்.

சுண்டைக்காயில் இரும்புச்சத்து அதிகமாக உள்ளது. இந்தக்காய் ஆஸ்துமா, ஜுரம் முதலியவற்றை நீக்கும்.
 
கர்ப்பிணிப் பெண்கள் தினமும் ஒரு முறை கேழ்வரகில் செய்த உணவுப்பொருளை சாப்பிசுவதால் இரும்புச்சத்து, கால்சியம் கிடைக்கும்.
 
வேப்பம்பூவை ரசம் வைத்துச் சாப்பிட்டால் உடம்பில் உள்ள கிருமிகள் அழியும். பித்தம் குறையும்.
 
தினமும் முருங்கைக் கீரையைச் சாப்பிட்டால் நீரழிவு நோய் கட்டுப்படும். கண் பார்வை தெளிவு பெறும்.
 
அதிக இருமல் ஏற்படும் போது ஒரு ஸ்பூன் தேன் சாப்பிட்டால் இருமல் குறையும்.
 
சாதாரண வாய்வுப் பிடிப்பிற்கு சுக்கையும், பனை வெல்லத்தையும் கலந்து சாப்பிட்டால் போதும்.
 
மணத்தக்காளிக் கீரையை பருப்புடன் சேர்த்து தினமும் சாப்பிட்டு வந்தால் ஆசனக்கடுப்பு, மூல நோய் குணமாகும்.
 
முள்ளங்கி கீரையில் வைட்டமின் சத்து உள்ளது. இக்கீரை தொற்று நோய்களை விரட்டி அடிக்கும்.
 
உடல் எடை குறைந்தவர்கள் வாழைப்பழம் தினமும் இரவில் உண்டு வந்தால் எடை கூடும்.


No comments:

Post a Comment