some-useful-tips-to-keep-the-kitchen-clean சமையலறையை சுத்தமாக வைத்துக்கொள்ள சில பயனுள்ள குறிப்புகள் !! - Health Tips & Hair Tips

Latest Health Tips and Hair tips

Wednesday, 1 September 2021

some-useful-tips-to-keep-the-kitchen-clean சமையலறையை சுத்தமாக வைத்துக்கொள்ள சில பயனுள்ள குறிப்புகள் !!

Kitchen Tips

சமையலறையை சுத்தமாக வைத்துக்கொள்ள சில பயனுள்ள குறிப்புகள் !!

இட்லி ஊற்றும் பாத்திரம் அடியில் கருக்காமல் இருக்க தண்ணீரில் எலுமிச்சைத் தோல் அல்லது சிறிது புளியைப் போட்டு விட்டால் பாத்திரம் கருக்காமல் இருப்பதோடு வெள்ளையாகவும் இருக்கும்.

சின்க்கின் அடியில் குப்பைத் தொட்டியை வைக்கும் பொழுது பக்கத்தில் பேக்கிங் சொடாவை ஒரு கிண்ணத்தில் போட்டு வைத்தால் துர்நாற்றம் வராது.
 
காய்கள், பழங்கள் வெட்டும் கத்தியில் இருக்கும் கறைகளை நீக்க அதன் மீது வெங்காயத்தை தேய்த்து துணியால் துடைத்தால் கத்தி சுத்தமாகி விடும்.
 
எலுமிச்சை சாறு அல்லது தோலைக் கொண்டு கிச்சன் சுவரைத் துடைத்தால் அதில் படிந்திருக்கும் எண்ணெய் கறை நீங்கி விடும்.
 
கண்ணாடிப் பாத்திரம் உடைந்து விட்டால் சிறிது அரிசி மாவைப் பிசைந்து அந்த இடத்தை ஒத்தி எடுத்தால் கண்ணாடித் துகள்கள் மாவில் ஒட்டிக் கொள்ளும்.
 
சமையலறையில் எறும்பு வராமல் இருக்க உப்பு கலந்த நீரை சமையல் மேடையின் நான்கு ஓரங்களிலும் தெளித்து விட்டால் எறும்புத் தொல்லை இருக்காது.
 
பால் பாத்திரத்தை குளிர்ந்த நீரில் கழுவிய பிறகு பாலை ஊற்றி அடுப்பில் வைத்தால் பால் அடியில் ஒட்டிக் கொள்ளாது. இரவு உறங்குவதற்கு முன்பு கிச்சன் சின்கில் சிறிது பேக்கிங் சோடாவைத் தூவி விட்டு காலையில் பழைய டூத் ப்ரஸ்ஸால் தேய்த்துக் கழுவினால் சின்க் புதியது போல் மின்னும்.
 
கண்ணாடியை துடைக்கும் போது பழைய செய்தித் தாளை தண்ணீரில் நனைத்து துடைத்தால் கண்ணாடி பளிச்சென்று இருக்கும். எலுமிச்சை சாறுடன் பேக்கிங் சோடா கலந்து கிச்சன் குழாய்களை துடைத்தால் அவை பளிச்சென்று சுத்தமாகி விடும்.
 
காய் நறுக்கும் பலகையில் உப்பு தூவி அரை மூடி எலுமிச்சம் பழத்தைக் கொண்டு தேய்த்தால் பலகை சுத்தமாகி விடும்.


No comments:

Post a Comment