the-medical-benefits-of-snail-sun(நத்தைச் சூரியின் மருத்துவப் பயன்கள்!) - Health Tips & Hair Tips

Latest Health Tips and Hair tips

Saturday, 25 September 2021

the-medical-benefits-of-snail-sun(நத்தைச் சூரியின் மருத்துவப் பயன்கள்!)

femina

நத்தைச் சூரியின் மருத்துவப் பயன்கள்!


நத்தைச் சூரியின் விதையைப் பொடித்து தினமும் 1 தேக்கரண்டி அளவு எடுத்து தேனில் குழைத்து சாப்பிட்டு வரவேண்டும். இதனால் நோயின் தாக்கம் குறைவதுடன் உடலும் வலுப்பெறும்.

நத்தைச்சூரியின் விதையை லேசாக வறுத்து பொடியாக்கி வைத்துக்கொண்டு 1 தேக்கரண்டி அளவு எடுத்து பாலில் கொதிக்க வைத்து அதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து காலை, மாலை சாப்பிட, உடல் சூடு தணிவதுடன் உடலில் உள்ள தேவையற்ற இரசாயன வேதிப் பொருட்கள் வெளியேறும். நத்தைச்சூரி சிறுநீரகக் கல்லடைப்பு ஏற்படாமல் தடுப்பதோடு இரத்தத்தைச் சுத்தப்படுத்தும். விதை, உடல் சூட்டைப் போக்கி உடலுக்கு குளிர்ச்சியைக் கொடுக்கும். சீதபேதி, பெருங் கழிச்சலைப் போக்கும்.

பெண்களுக்கு மாதவிலக்குக் காலங்களில் உண்டாகும் அதிக உதிரப் போக்கைத் தடுக்கும் வெள்ளைப் படுதலைக் குணமாக்கும்.நத்தைச் சூரி வேரை பொடியாக்கி 10 கிராம் அளவு பசும்பாலில் கலந்து கொதிக்க வைத்து அருந்தி வந்தால் தாய்ப்பால் பெருகும்.நத்தைச்சூரி வேரை இடித்து 200 மி.லி. தண்ணீரில் கொதிக்க வைத்து 2 மணி நேரம் ஊறவைத்து வடிகட்டி தினமும் 50 மி.லியாக நாள் ஒன்றுக்கு மூன்று வேளை குடித்து வர காய்ச்சல் மற்றும் நோயின் தாக்கம் குறையும்.

No comments:

Post a Comment