அஸ்வகந்தாவின் மருத்துவப் பயன்கள்
அஸ்வகந்தாவின் முழுச்செடியுமே மருத்துவப் பயன்கள் கொண்டது.வட மொழியில் அஸ்வகந்தா தமிழகத்தில் இதன் பெயர் அமுக்கிரா கிழங்கு. இதில் சீமை அமுக்கிரா மற்றும் நாட்டு அமுக்கிரா என இரு வகை உண்டு. சீமை அமுக்கிரா கிழங்கே சிறந்தது என்று பாரம்பரியம் பரிந்துரைக்கிறது. மூலிகை வயாக்ரா என்று இதற்கு இன்னொரு பெயரும் உண்டு. அஸ்வகந்தா என்பது மூலிகை மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் ஒரு செடியாகும். இந்த செடியில் உள்ள வேரும், இலையும் மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது. அஸ்வகந்தாவிற்கு அசுவகந்தி, அமுக்குரவி, அமுக்கிரி, அசுவம், ஆசிவகம், இருளிச்செவி,
வராககர்ணி இப்படி பல்வேறு பெயர்களும் உண்டு.
தூக்கம் இன்மை:
அஸ்வகந்தாவில் மன அழுத்தத்தைக் குறைக்கும் சக்தி உள்ளது. நமக்கு ஏற்படும் பதற்றத்தினாலும், மன அழுத்தத்தினாலும் மனசோர்வு, உடல் சோர்வு ஏற்படும். அந்த சோர்வினை நீக்கி புத்துணர்ச்சியை அளிக்கிறது. இதிலுள்ள அடோப்டோஜினிக் மற்றும் ஊட்டச்சத்து சார் பண்புகள் மனச்சோர்வை குறைக்கிறது. இதனால் நம் மன அழுத்தமானது குறைந்து நிம்மதியான உறக்கத்தையும் தருகிறது
நீரிழிவு நோய்:
சர்க்கரை நோயாளிகளுக்கு இன்சுலின் சுரப்பி அதிகரிக்க, இந்த அஸ்வகந்தா கிழங்கு பயன்படுத்தப்படுகிறது என்று ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. சர்க்கரை நோயாளிகளுக்கு மட்டுமல்லாமல், ஆரோக்கியமாக இருப்பவர்களுக்கும் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்படுத்தி சீராக வைக்கும் தன்மையும் இதற்கு உண்டு.
மூட்டு வலி:
30 வயதைத் தாண்டியவர்களுக்கு ஏற்படும் மூட்டு வீக்கம், மூட்டுகளில் வலி இதில் பாதிக்கப்பட்டவர்கள் அஸ்வகந்தாவை பயன்படுத்தினால் மூட்டில் உள்ள வலி குறைகிறது, என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. ஆயுர்வேதத்தில் கீழ்வாதம், குடல் மற்றும் உடலின்
செரிமான அமைப்பிற்கு நம் உடலில் உள்ள பீட்டா சத்தின் ஏற்றத்தாழ்வு மூலம் ஏற்படுகிறது. இந்த அஸ்வகந்தா விற்கு பீட்டா சத்தினை அதிகரிக்கும் உண்டு.
நோய் எதிர்ப்பு சக்தி:
அஸ்வகந்தாவில் “மைடேக் காளான் சாறு” உடன் சேர்த்து பயன்படுத்தினால் நமக்கு ஏற்படும் நோய் தொற்றிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம். ஜலதோஷம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு இந்த அஸ்வகந்தா அவை தேநீருடன் சேர்த்து வடிகட்டி குடித்து வந்தால் ஜலதோஷம் சரியாகும்.
தைராய்டு:
நம் உடலில் சுரக்கும் ஜி4 ஹார்மோனின் சுரப்பி குறைவாக உள்ளதால் தைராய்டு பிரச்சினை ஏற்படுகிறது. இந்த ஹார்மோனை அஸ்வகந்தா மருந்து அதிகரிக்கிறது என்பதை ஆராய்ச்சி மூலம் கண்டறியப்பட்டுள்ளது. தைராய்டுக்கான நிரந்தர தீர்வினை கண்டறிய ஆராய்ச்சிகள் இன்னும் நடந்து கொண்டுதான் இருக்கின்றது.
No comments:
Post a Comment