வாழைப்பழத்தால் பெண்களுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
வாழைப்பழத்தில் உள்ள சத்துக்களைப்பற்றியும் , வாழைப்பழம் சாப்பிடுவதால் என்ன என்ன நன்மைகள் உண்டாகும் என்றும் பார்க்கலாம்.
1. நார்ச்சத்து
வாழைப்பழத்தில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால், நீண்ட நேரம் பசி தாங்கும். அதனால் உடல் எடை குறையும்.
நார்ச்சத்து நல்ல ஜீரண
சக்தியைத் தரும்.கரையும்நார்ச்சத்து கொலெஸ்ட்டிராலை நீக்கி, ரத்தத்தில் சக்கரை அளவை சீராக்கும். கரையாதநார்ச்சத்து உடலில் உள்ள கெட்ட பாக்டீரியார்களை நீக்கிவிடும்.மலச்சிக்கல், பைல்ஸ், வயிற்றுப்புண், நெஞ்செரிச்சல் ஆகியவற்றை குணப்படுத்தும் உடல் எடை குறையும்.
2. வைட்டமின் சி
வாழைப்பழத்தில் உள்ள வைட்டமின் சி யானது, இரும்புச்சத்தை நன்றாக உறிஞ்ச உதவும்.
உடலில் உள்ள செல்களும், திசுக்களும் சேதம் அடையாமல் பார்த்துக்கொள்ளும்.தூங்கும் நிகழ்வுகள், மனச்சோர்வு, வலியை கையாளுதல் போன்ற மூளை சம்மந்தமான ஆரோக்கியத்தை சீராக்கும் தன்மை கொண்டது வைட்டமின் சி தோள், எலும்பு, உடல் ஆகியவற்றை இணைக்கும் கொலாஜென் என்னும் புரதம் இயங்க வைட்டமின் சி உதவுகிறது.
3. வைட்டமின் பி6
வைட்டமின் பி6 வேறு பழங்களில் கிடைப்பது அரிது.
வாழைப்பழத்தில் அதிகம் இருப்பதால் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. வாழைப்பழத்தில் உள்ள வைட்டமின் பி6 கலீரல் மற்றும் கணையத்தில் உள்ள தேவை இல்லாத ரசாயனங்களை நீக்க வல்லது.நரம்பு மண்டலத்தையும் சீராக்கும்.உடலில் உள்ள மாவுச்சத்தையும், கொழுப்பையும் கரைத்து ஆற்றல் தரக்கூடியது.அமினோ ஆசிட்டையும் கரைத்துவிடும்
4. பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம்
வாழைப்பழத்தில் உள்ள பொட்டாசியம் சத்து, ரத்த அழுத்தத்தை சீராக்கி, இருதய நோய் வராமல் பார்த்துக்கொள்ளும். முடி வளர பொட்டாசியம் சத்து உதவுகிறது. அதிகம் உட்கொண்டால் முடி உதிரும்.இரத்தத்தில் உள்ள சக்கரை அளவை சீராக வைக்கவும், உடல் நன்றாக வேலை செய்யவும் மெக்னீசியம் தேவை. இது வாழைப்பழத்தில் அதிகமாகவே இருக்கிறது.சருமதில் ஏற்படும் சேதத்தை சரி செய்யவும் உதவுகிறது
No comments:
Post a Comment