கரோனா தாக்குதலின் உண்மை நிலவரம் என்ன?
கரோனா வைரஸ் தாக்குதலின் உக்கிரம் இன்னும் குறைந்தபாடில்லை. சொல்லப் போனால், முன்பைவிட அதன் வீரியம் அதிகரித்துள்ளது. நாளை பிரதமர் மோடி வீட்டுக்குள்ளேயே மக்கள் இருக்க வேண்டும் என்று உத்தரவு வேறு போட்டுள்ளார். என்னதான் நடக்கிறது என்று மக்கள் விழி பிதுங்கி உள்ளனர்.
சீனாவை மட்டும் ஆட்டிப் படைத்து வந்த கரோனா வைரஸ் தற்போது உலகில் 78 நாடுகளில் பரவியுள்ளது. உலகெங்கும்
10000க்கும் அதிகமானோர் கரோனா வைரஸால் பலியாகி உள்ளனர். இந்தியாவில் 166 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 3 பேருக்கு உறுதிசெய்யப்பட்டுள்ளது. கரோனாவை எப்படிக் கையாள வேண்டும் என்பதற்கான முன் அனுபவம் நம்மிடம் இல்லை என்று உலக சுகாதார நிறுவனம் கவலையுடன் கூறி உள்ளது.
கரோனா வைரஸ் பரவுவதைத் தவிர்க்க, மக்கள் கும்பலாகக் கூடுவதைத் தவிர்க்க வேண்டும் என்று உலகம் முழுவதும் வல்லுநர்கள் அறிவுறுத்துகிறார்கள். பிரதமர் நரேந்திர மோடியும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தும் இந்த ஆண்டு ஹோலி கொண்டாட்டத்தில் பலர் பங்கேற்கவில்லை. சமூக வலைத்தளங்களில், கரோனா வைக் குறித்தும், அதற்கான சிகிச்சைகள் குறித்தும், அதைத் தடுக்கும் வழிமுறைகள் குறித்தும் உண்மைக்குப் புறம்பான
தகவல்கள் தொடர்ந்து பரப்பப்படுகின்றன.
இன்னொரு முக்கியமான செய்தி, மூலிகைகளால் குறைக்க மற்றும் தடுக்க முடியும் என்றும் கூறுகின்றனர். ஆனால், இதுவரை எந்த ஆய்வும் உறுதி செய்யப்பட வில்லை. இப்போதைக்கு, கூட்டத்தில் இருந்து விலகி இருப்பதோ அல்லது வீட்டிலேயே இருப்பது நல்லது. மார்ச்31 என்று அரசு அறிவித்தாலும், இது பல மாதங்கள் நீடிக்கும் என்றே தோன்றுகிறது.
No comments:
Post a Comment