wheatgrass-juice அருகம்புல் ஜூஸ் - Health Tips & Hair Tips

Latest Health Tips and Hair tips

Monday, 20 September 2021

wheatgrass-juice அருகம்புல் ஜூஸ்

Femina

அருகம்புல் ஜூஸ்


ஊட்டச்சத்து நிறைந்த ஒரு கிளாஸ் அருகம் புல் ஜூஸுடன் ஒவ்வொரு நாளையும் தொடங்குங்கள்.
கட்டுரை: அஞ்சலி சமந்தா

அருகம் புல் என்பது பல நன்மைகள் நிறைந்த, ஊட்டச்சத்து நிறைந்த உணவு. என்ன இது வித்தியாசமாக இருக்கிறதே என்று நினைக்க வேண்டாம். ஒரு சிறு தொட்டியில் இந்தப் புல்லை வளர்க்கலாம். அல்லது கடைகளில் கேட்டு வாங்கிக் கொள்ளலாம்.

இதில் இரும்புச்சத்து, கால்சியம், மக்னீசியம், அமினோ அமிலங்கள், குளோரோஃபில், வைட்டமின் ஏ, சி, ஈ போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துகள் நிறைந்திருப்பதாக தெரிய வருகிறது. இதன் சத்துக்கள், உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதோடு, வயிற்றுக்கோளாறுகளை சரிசெய்கிறது, தீமை செய்யும் பாக்டீரியாக்களைக் கொல்கிறது. அருகம் புல் லில் அதிக குளோரோஃபில் இருப்பதால், இயல்பாகவே காரத்தன்மை கொண்டது. இதனால் செரிமான சிக்கல்கள் தீரும், மலச்சிக்கல், வயிற்றுப்புண் போன்றவை சரியாக உதவும். மேலும் குளோரோஃபில்லும், செலீனியமும் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்க உதவும். இவற்றைத் தவிர அனீமியா, நீரிழிவு, நோய்த்தொற்றுகள், சருமப் பிரச்சினைகள், அல்சரேட்டிவ் கொலிட்டஸ், மூட்டு வலிகள் போன்ற பிரச்சினைகளைக் குணப்படுத்தவும் அருகம் புல் உதவுவதாக கண்டறியப்பட்டுள்ளது என்கிறார் தில்லியை சேர்ந்த ஊட்டச்சத்து மருத்துவர் இஷி கோஸ்லா. அது மட்டுமில்லாமல், அருகம் புல் மாத்திரைகளாகவும், உறைந்த ஜூஸ், பவுடர் ஆகிய வடிவங்களிலும்கூட கிடைக்கிறதாம்.

எவ்வளவு சாப்பிட வேண்டும்?
ஒரு நாளுக்கு ஒரு ஷாட். அதாவது 30 மி.லி. முதல் 40 மி.லி. வரை எடுத்துக் கொள்வது போதும். இதைவிட அதிக அளவில் எடுத்துக் கொள்வதால் கூடுதல் பலன் எதுவும் கிடைக்கப் போவதில்லை.

ஃபிளேவர் சேர்த்துக் கொள்ளுங்கள்!
அருகம் புல்லின் சுவை உங்களுக்கு உடனடியாக பிடிக்காமல் போகக்கூடும். எனவே, அதை மற்ற ஜூஸ்கள் அல்லது பானங்களில் கலந்து குடிக்கலாம். டீ அல்லது மற்ற ஜூஸ்கள் அந்தப் புல்லின் சுவையை மறைக்க உதவலாம். புதினா, சீலரி, சாத்துக்குடி ஜூஸ், கொஞ்சம் ஆலிவ் எண்ணெய், கல் உப்பு போன்றவற்றை கலந்து ஜூஸ் காக்டெயில் செய்து அருந்தலாம் என்று பரிந்துரைக்கிறார் மும்பையை சேர்ந்த ஊட்டச்சத்து நிபுணர் மாதுரி ரூயா. அருகம் புல் ஜூஸுடன் உடல்நலனுக்கு ஏற்ற எக்ஸ்ட்ரா வர்ஜின் ஆலிவ் ஆயில் அல்லது ஃபிளாக்ஸ்சீடு ஆயில் போன்றவற்றை கலந்து அருந்துவதால், உடலில் ஊட்டச்சத்து ஏற்றுக்கொள்ளப்படும் அளவு அதிகரிக்கும். இது அடிக்கடி பசிக்கும் நிலையையும் குறைக்கும். ஜூஸாக குடிக்க முடியவில்லையா, பரவாயில்லை. துணை உணவாக, மாத்திரைகள், கேப்ஸ்யூல்கள், திரவப் பொருள்களாகவும் நீங்கள் இதை உட்கொள்ள முடியும்.

No comments:

Post a Comment