பருப்பின் ஆரோக்கிய நன்மைகள்
உலக பருப்பு வகைகள் தினமான இன்று (ஃபிப்ரவர் 10), நாம் ஆரோக்கியமாக இருக்க உதவும் பருப்பு வகைகள் எவை எவை, அதன் பலன்கள் என்னென்ன என்று பார்க்கலாம்.
துவரம் பருப்பு
துவரம் பருப்பில் நல்ல அளவில் புரோட்டீன், ஃபோலிக் ஆசிட் மற்றும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.
மலச்சிக்கல் பிரச்சனை ஏற்படுவதை தடுக்கலாம்.
பாசிப்பருப்பு
பாசிப்பருப்பில் வைட்டமின் ஏ, பி, சி, ஈ மற்றும் கனிமச்சத்துக்களான கால்சியம், இரும்புச்சத்து மற்றும் பொட்டாசியம் அதிகம் உள்ளது.
மேலும்
உடல் எடையை குறைப்பதற்கு உதவியாகவும் இருக்கும்.
பச்சை பயறு
பச்சை பயறு சாப்பிட்டால், உடலில் உணவுகள் எளிதல் செரிமானமடைவதோடு, உடல் எடை மற்றும் கொலஸ்ட்ரால் குறையவும் உதவியாக இருக்கும்
கொண்டைக்கடலை
கொண்டைக்கடலை இதய நோய் ஏற்படுவதற்கான வாய்ப்பும் குறையும்.
மேலும் இது உடல் சக்தியையும் அதிகரிக்கும்.
மைசூர் பருப்பு
மைசூர் பருப்பின் சிறப்பு புற்றுநோய் தாக்கத்தில் இருந்தும் காப்பாற்றும்.
உடலில் இரத்தத்தை அனைத்து உறுப்புகளுக்கும் சீராக
கொண்டு செல்லும்.
சுண்டல்
கொண்டைக்கடலையில் ஒரு வகை தான், இந்த சுண்டல்.
இதனை உணவில் அதிகம் சேர்த்து வந்தால், இதயம் ஆரோக்கியமாக இருக்கும்.
No comments:
Post a Comment