benefits-of-eating-sapota-fruit-regularly(சப்போட்டா பழத்தை தொடர்ந்து சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள் !!) - Health Tips & Hair Tips

Latest Health Tips and Hair tips

Saturday 16 October 2021

benefits-of-eating-sapota-fruit-regularly(சப்போட்டா பழத்தை தொடர்ந்து சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள் !!)

Sapota Fruit

சப்போட்டா பழத்தை தொடர்ந்து சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள் !!


வைட்டமின் ஏ நிறைந்துள்ள சப்போட்டாப் பழத்தைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் வயதான காலத்தில்கூட பார்வைக் குறைபாடு ஏற்படாமல் பாதுகாக்கும்.

சப்போட்டா பழத்தில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் தோலின் சுருக்கங்கள் ஏற்படாமல் தடுக்கிறது. சப்போட்டாவை தொடர்ந்து சாப்பிட்டு வருவதன் மூலம் நாம் நீண்ட நாட்களுக்கு இளமையான தோற்றத்தை பெறலாம். 
 
பொடுகு தொல்லை நீங்க சப்போட்டா விதைகளை விழுது போல நன்றாக அரைத்து அதனுடன் நல்லெண்ணெய் சேர்த்து பின்பு இரவில் படுக்கும் போது மண்டையோட்டில் நன்றாக படும்படி தேய்த்து பின்பு மறுநாள் காலையில் தலைக்கு குளித்து விட வேண்டும். இது தலைமுடிக்கு மென்மையை தருவதோடு பொடுகையும் நீக்கும். 
 
ப்போட்டா செரிமானப்பாதையை சரிசெய்வதன்மூலம் உணவுக்குழாய் அழற்சி, குடல் அழற்சி, எரிச்சல் கொண்ட குடல் நோய் மற்றும் இரைப்பை அழற்சி போன்ற நோய்களை தடுக்க உதவுகிறது.
 
கூர்மையான கண் பார்வைக்கு சப்போட்டாவை தொடர்ந்து சாப்பிட்டு வருவதன் மூலம் வயது முதிர்ந்த காலத்திலும் நல்ல கண் பார்வையை பெறலாம். இதிலுள்ள வைட்டமின் ஏ சத்தானது நம் கண்களை ஆரோக்கியமாக வைப்பதோடு கண்பார்வையை குறையாமல் பார்த்துக் கொள்கிறது. 
 
ஆரோக்கியமான எலும்புகள் பெற கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து போன்ற சத்துக்கள் இந்த சப்போட்டாவில் அதிக அளவு உள்ளது. சத்துக்களின் குறைபாட்டின் காரணமாக நம் எலும்புகளானது ஆற்றலை இழக்கின்றது. 
 
சப்போட்டாவை தொடர்ந்து சாப்பிட்டு வருவதால் சக்தி அதிகரிக்கப்பட்டு எலும்புகள் வலுவடைகிறது. மலச்சிக்கல் நீங்க சப்போட்டாவின் நார்ச்சத்து அதிக அளவில் உள்ளது. இது உடலின் குடல் ஆரோக்கியத்தை அதிகரித்து உடலை நோய் தொற்றிலிருந்து பாதுகாக்கிறது. 


No comments:

Post a Comment