benefits-of-eating-sundakkai-vathal-often-in-cooking(சுண்டைக்காய் வற்றலை அடிக்கடி சமையலில் சேர்த்து சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள் !!) - Health Tips & Hair Tips

Latest Health Tips and Hair tips

Wednesday, 13 October 2021

benefits-of-eating-sundakkai-vathal-often-in-cooking(சுண்டைக்காய் வற்றலை அடிக்கடி சமையலில் சேர்த்து சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள் !!)

Sundakkai Vathal

சுண்டைக்காய் வற்றலை அடிக்கடி சமையலில் சேர்த்து சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள் !!


ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தக் கூடியது. ரத்தத்தில் கொழுப்பு சேர்ந்து, அது ரத்தக் குழாய்களில் படிவதைத் தவிர்க்கும் சக்தி இதற்கு உண்டு.


ஆன்டி இன்ஃப்ளமேட்டரி குணங்கள் கொண்டது. வெள்ளை ரத்த அணுக்களை அதிகரித்து அதன் விளைவாக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக்கூடியது.
 
இதில் உள்ள இரும்புச் சத்தானது ரத்த சோகையை எதிர்த்து போராடக்கூடியது. காய்ச்சல் நேரத்தில் சுண்டைக்காயை சேர்த்துக்கொள்வதன் மூலம் வெள்ளை ரத்த அணுக்களை அதிகரிப்பதுடன் , காயங்களையும் , புண்களையும் ஆற வைக்கும்.
 
சுண்டைக்காய் வற்றலை பொடி செய்து தினமும் ஐந்து கிராம் பொடியை காலையில் சாப்பிட்டு வந்தால் உடல் பருமன் குறையும். சுண்டைக்காயை அடிக்கடி சமையலில் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் ரத்த சோகை குணமாகும்.
 
சம அளவு சுண்டைக்காய் வற்றல், சீரகம், சோம்பு ஆகியற்றை தினமும் காலை, மாலை இருவேளை தலா இரண்டு கிராம் சாப்பிட்டு வந்தால் தைராய்டு கோளாறுகள் குணமாகும். 
 
சளித்தொல்லை சுண்டக்காய் சற்று உஷ்ண தன்மை கொண்ட ஒரு காய் வகையாகும். ஜலதோஷம் அல்லது சளி பாதிப்புகள் ஏற்பட்டவர்கள் பிஞ்சு சுண்டைக்காயைச் சமைத்து சாப்பிட்டு வந்தால் தொண்டை, நெஞ்சில் ஏற்படும் சளிக்கட்டு குறையும்.
 
சுண்டைக்காய் வற்றல் மற்றும் ஒமம் சம அளவு எடுத்து அரைத்து, தினமும் காலையில் இரண்டு கிராம் அளவுக்குச் சாப்பிட்டு வந்தால் குடல் பூச்சிகள் ஒழியும்.


No comments:

Post a Comment