broccoli-can-help-prevent-skin-diseases(சரும நோய்கள் வராமல் தடுக்க உதவும் பிரக்கோலி !!) - Health Tips & Hair Tips

Latest Health Tips and Hair tips

Wednesday, 13 October 2021

broccoli-can-help-prevent-skin-diseases(சரும நோய்கள் வராமல் தடுக்க உதவும் பிரக்கோலி !!)

Broccoli

சரும நோய்கள் வராமல் தடுக்க உதவும் பிரக்கோலி !!



பிரக்கோலியில் அதிக அளவில் கால்சியம் மற்றும் வைட்டமின் கே எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்னைகள் வராமல் பாதுகாக்கும்.


பிரக்கோலியில் இருக்கும் அதிகப்படியான ஃபோலேட், இதய இதய நோய்கள் வராமல் தடுக்கும். இதிலிருக்கும் பாலிபினால் இதயச் செயல்பாடுகளை மேம்படுத்தும். இதில் உயிர் வளியேற்ற எதிர்ப் பொருள் நாம் சாப்பிடும் உணவுகள் எளிதில் செரிமானம் அடைய உதவுகிறது.
 
பிரக்கோலி இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தும். ஆகவே சர்க்கரை நோய் உள்ளவர்கள் இதை அதிகம் சாப்பிடலாம்.
 
பிரக்கோலியில் இருக்கும் லூடின், சியாங்தின் போன்ற வேதிப்பொருள்கள் கண் ஆரோக்கியத்துக்கு மிகவும் உதவுகிறது. பிரக்கோலியில் உள்ள வைட்டமின் சி மற்றும் வைட்டமின் பி 2 ஆகியவை காண்பார்வையை அதிகரிக்கும்.
 
பிரக்கோலி அதிகமாக சாப்பிடுவதால் சரும நோய்கள் வராமல் தடுக்கலாம். மேலும் தோல் புற்று நோய் ஏற்படுவதை தடுக்கலாம்.
 
பிரக்கோலியின் நிறம் முழுவதும் ஒரே மாதிரி சமமாக இருக்க வேண்டும். அது பழுப்படைந்து இருக்கக் கூடாது. இதன் நடுவில் மஞ்சள் அல்லது பழுத்த பூ போன்ற தோற்றம் இருக்கக்கூடாது. அதன் தண்டு எந்தப் புள்ளிகளும் இல்லாமல் உறுதியாக இருக்க வேண்டும். இது தான் பிரஷ் பிரக்கோலி
 
பிரக்கோலி ருசியான சுவையும் மொறுமொறுப்புத் தன்மையும் கொண்டது. இதை வேகவைத்தோ அல்லது பச்சையாகவோ சாப்பிடலாம். மேலும் சூப், சாலட் ஆகியவற்றில் சேர்த்து சாப்பிடலாம். 

No comments:

Post a Comment