குங்குமப்பூவில் உள்ள மருத்துவ குணங்கள் பற்றி தெரியுமா....?
குங்குமப்பூ அழகு, உணவு பொருட்களில் பயன்படுவதோடு மட்டுமல்லாமல், உடல் நல பிரச்சனைகளான மன இறுக்கம், மன அழுத்தம், பார்வை கோளாறு மற்றும் ஞாபக சக்தி போன்றவற்றை சரி செய்யவும் பயன்படுகிறது.
பாலுடன் குங்குமப் பூவை சேர்த்து தினமும் சாப்பிட்டு வந்தால் தேக ஆரோக்கியம் மற்றும் சரும பொலிவு கூடும்.
முகம் பிரகாசமடையும். நல்ல தூக்கத்தை கொடுக்கும்
குங்குமப்பூவில் சப்ரனால் என்னும் பொருள் உள்ளது. இது ஒரு மயக்க மருந்து போல் செயல்படுகிறது. மேலும் குங்குமப்பூவில் ஆன்டிசெப்டிக் தன்மை உள்ளது. இது நரம்பு மண்டலத்தை இறுக்கத்திலிருந்து தளர்த்துகிறது. இது இயற்கையான நிம்மதியான தூக்கத்தை கொடுக்கிறது.
தலைவலி, மூக்கு நீர் ஒழுகுதுல், அதிக தாகம், குமட்டல், வாந்தி, உடல் எரிச்சல், சூதக அழுக்கு, ஆண்மைக் குறைவு ஆகிய வியாதிகளுக்கு குங்குமப் பூ அரிய மருந்தாகும்.
குங்குமப் பூவை 1 பங்கு எடுத்து, அதை 80 பங்கு தண்ணீரில் ஊற வைத்து வடிகட்டி, அதில் 30 மிலி அளவு காலை, மாலை இருவேளை அருந்தி வர தலைவலி, மூக்கு நீர் ஒழுகுதுல்,
அதிக தாகம், குமட்டல், வாந்தி, உடல் எரிச்சல், சூதக அழுக்கு, ஆண்மைக் குறைவு ஆகியவை நீங்கும்.
குங்குமப் பூவுடன் தேன் கலந்து தினமும் இருவேளை உட்கொண்டு வர ஆஸ்துமா முதலிய சுவாச நோய்களை போக்கி சுவாசத்தை எளிதாக்கும்.
அம்மை நோய் கண்டவுடன் துளசி இலைகளையும், குங்குமப்பூவையும் சேர்த்து அரைத்து உட்கொள்ள கொடுக்க அம்மை நோய் குணமாகும்.
No comments:
Post a Comment