kasini-keerai-used-as-medicine-for-many-diseases(பல நோய்களுக்கு மருந்தாக பயன்படும் காசினிக்கீரை !!) - Health Tips & Hair Tips

Latest Health Tips and Hair tips

Wednesday 20 October 2021

kasini-keerai-used-as-medicine-for-many-diseases(பல நோய்களுக்கு மருந்தாக பயன்படும் காசினிக்கீரை !!)

Kasini keerai

பல நோய்களுக்கு மருந்தாக பயன்படும் காசினிக்கீரை !!


காசினிக் கீரையில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு சத்து, மற்றும் வைட்டமின் ஏ,பி,சி ஆகிய சத்துக்கள் உள்ளன. இதன் வேர் காய்ச்சலை குணமாக்கும் சக்தி கொண்டது.

காசினிக்கீரையில் கொம்புக் காசினி, சீமைக் காசினி, சிக்கரி ரகங்களான வேர்காசினி, சாலடு காசினி ஆகிய இரகங்கள் உள்ளன. காசினி பலவகைப்பட்ட மண் வகைகளிலும் வளரும் தன்மையுடையது. செம்மண்ணில் நன்கு வளரும் தன்மை உடையது.
 
இது நல்ல ருசியுள்ள கீரை உடலுக்கு பலத்தை கொடுக்கும் கீரை. இக்கீரை தேக உஷ்ணத்தை சமன்படுத்தக் கூடிய சக்தியைக் கொண்டது. மூலிகை வைத்தியத்தில் பல நோய்களுக்கு மருந்தாகப் பயன்படுகிறது. இக்கீரையைப் பருப்புடன் சேர்த்துக் கடைந்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.
 
சிலருக்கு புண் ஏற்பட்டு விட்டால், அவ்வளவு சீக்கிரம் ஆறவே ஆறாது. அவர்கள் இக்கீரையை மைபோல அரைத்து புண்ணின் மேல் கனமாக வைத்து கட்டிவந்தால் ஒரு வாரத்தில் ஒன்றாகிவிடும். இரத்தத்தை சுத்தம் செய்து, இரத்தத்தை விருத்தி செய்யும் மூலச்சுட்டை தணிக்கும். உயிர்ச்சத்துக்கள் கொண்டது. எனவே உடலுக்கு நல்லதைச் செய்யும்.
 
காசினிக் கீரையை பொடி செய்து, தினமும் காலை வேளையில் ஒரு குவளை வெந்நீரில் ஒரு தேக்கரண்டி கலந்து வெறும் வயிற்றில் அருந்தி  வந்தால் நீரிழிவு நோய் கட்டுப்படும். மேலும் உடல் சூடு தணியும்.
 
பெண்களுக்கு ஏற்படும் வெள்ளை ஒழுக்கு பெரும்பாடு நோய்களை குணமாக்கும். பற்களுக்கு உறுதியையும், பல் சம்பந்தமான எல்லா நோய்களும் இக்கீரையை உண்டுவரக் குணமாகும். இக்கீரையை வாரத்திற்கு ஒரு முறையோ, இரு முறையோ, பாசிப்பருப்புடன் கலந்து சாப்பிட்டு வருவது உடல் நலத்திற்கு பயன் தரும்.

No comments:

Post a Comment