pomegranate-fruit-helps-to-prevent-constipation-problem(மலச்சிக்கல் பிரச்சனை ஏற்படாமல் தடுக்க உதவும் மாதுளம் பழம் !!) - Health Tips & Hair Tips

Latest Health Tips and Hair tips

Wednesday 20 October 2021

pomegranate-fruit-helps-to-prevent-constipation-problem(மலச்சிக்கல் பிரச்சனை ஏற்படாமல் தடுக்க உதவும் மாதுளம் பழம் !!)

மலச்சிக்கல் பிரச்சனை ஏற்படாமல் தடுக்க உதவும் மாதுளம் பழம் !!

மாதுளம் பழத்தின் நன்மைகளை சில வரிகளில் சொல்லிவிட முடியாது. மாதுளம் பழமானது ஹீமோகுளோபினை அதிகரிக்கச் செய்கிறது. அவ்வாறு ஹீமோகுளோபின் அதிகரிப்பதால் நமது தலைமுடியின் வேர்க்கால்கள் உறுதியாகின்றது.

மாதுளம்பழத்தில் உள்ள அதிக அளவிலான நார்ச் சத்துக்கள் உடலின் ஆரோக்கியம் மற்றும் ஜீரண மண்டலத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது இதனால் தினமும் மாதுளம் பழத்தை நாமும் சாப்பிட்டு வரும் பொழுது மலச்சிக்கல் பிரச்சனை ஏற்படாமல் தடுக்க முடியும் 
 
மாதுளம் பழத்தில் உள்ள அதிக அளவிலான வைட்டமின்களானது முடியைப்  பளபளப்பாகச் செய்கின்றது. 
 
மாதுளம் பழத்தில் உள்ள வைட்டமின்கள் காரணமாக இதனை கர்ப்பிணிப் பெண்களுக்கு மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். கர்ப்பிணிப் பெண்கள் மாதுளம் பழத்தினை எடுத்துக் கொள்ளும்போது உடல் இரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அதிகரிக்கச் செய்கின்றது.
 
மாதுளம் பழமானது பெண்களின் கர்ப்பப்பை சம்பந்தப்பட்ட பிரச்சினைகளைச் சரி செய்கின்றது, மேலும் ஒபேசிட்டி பிரச்சினை உள்ளவர்கள் மாதுளம்பழத்தினை எடுத்துக் கொள்ளும்போது தேவையற்றக் கொழுப்புகள் கரையச் செய்கின்றது.
 
குழந்தைகளுக்கு 1 வயது முடிந்த பின்னர் இருந்தே மாதுளம்பழத்தை உண்ணக் கொடுப்பதால்  குழந்தைகளின் உடலில் ஹீமோகுளோபின் அதிகரிக்கச் செய்யும்.
 
மாதுளம்பழத்தில் அதிகப்படியான வைட்டமின்கள் மற்றும் பொட்டாசியம் நிறைந்து காணப்படுகின்றது உயர் ரத்த அழுத்தப் பிரச்சினை இருப்பவர்கள் மாதுளம்பழம் சாப்பிட்டு வரும் பொழுது இரத்த அழுத்தம் கட்டுக்குள் வைத்திருப்பதற்கு உதவுகின்றது.

No comments:

Post a Comment