snake-gourd-helps-to-expel-unwanted-salt-water-from-the-body(உடலில் உள்ள தேவையற்ற உப்பு நீரை வெளியேற்ற உதவும் புடலங்காய் !!) - Health Tips & Hair Tips

Latest Health Tips and Hair tips

Saturday, 9 October 2021

snake-gourd-helps-to-expel-unwanted-salt-water-from-the-body(உடலில் உள்ள தேவையற்ற உப்பு நீரை வெளியேற்ற உதவும் புடலங்காய் !!)

Snake Gourd

உடலில் உள்ள தேவையற்ற உப்பு நீரை வெளியேற்ற உதவும் புடலங்காய் !!

புடலங்காயில் கொத்துப்புடலை, நாய்ப்புடலை, பன்றிப்புடலை, பேய்ப்புடலை என பலவகை உள்ளது. புடலங்காயில் கால்சியம், மக்னீசியம், பாஸ்பரஸ் போன்ற சத்துக்கள் அதிக அளவு உள்ளதால் எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு மிகவும் உகந்தது.

புடலங்காயில் வைட்டமின் ஏ, பி மற்றும் சி நிறைந்துள்ளது. அதோடு கார்போ ஹைட்ரேட், மினரல்கள், இரும்புச் சத்து, கால்சியம், மக்னீசியம், அயோடின், பொட்டாசியம், பாஸ்பரஸ், மாங்கனீசு ஆகியவை நிறைந்திருக்கின்றன.
 
இதய கோளாறு உள்ளவர்கள், புடலங்காய் இலையின் சாறு எடுத்து நாள்தோறும், 2 தேக்கரண்டி வீதம் வெறும் வயிற்றில், 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால், இதயநோய்கள் அனைத்தும் நீங்கும்.
 
புடலங்காயை பொரியல் செய்து சாப்பிட்டால் நரம்புகளுக்கு புத்துணர்வு கிடைக்கும். நினைவாற்றல் அதிகரிக்கும். நீரிழிவு உள்ளவர்கள், புடலங்காயை எந்த வகையிலாவது உணவில் சேர்த்துகொண்டால், அனைத்து வகையான சத்துகளும் அவர்களுக்கு கிடைக்கும்.
 
சர்க்கரை நோயால் அவதிப்படுபவர்கள் புடலங்காயை உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் சர்க்கரையின் அளவு கட்டுபடும்.  புடலங்காய் உடல் எடையை கட்டுப்பாட்டில் வைக்க உதவுகிறது.
 
புடலங்காயில் தாதுச்சத்துகள், வைட்டமின்கள் மற்றும் கரோட்டீன்கள் அதிக அளவு இருப்பதால் முடி மற்றும் சரும ஆரோக்கியத்தைக் காக்கும் தன்மை கொண்டது. தலையில் உள்ள பொடுகைப் போக்கும் குணமும் இதற்கு உண்டு.
 
குடல் புண்ணை ஆற்றுவதற்கும் தொண்டை புண்ணை ஆற்றுவதற்கும் புடலங்காய் மிகவும் சிறந்தது. புடலங்காயில் நீர்ச்சத்து அதிகமிருப்பதால் உடலில் உள்ள தேவையற்ற உப்புநீரை வியர்வை, மற்றும் சிறுநீர் மூலம் வெளியேற்றும்.

No comments:

Post a Comment