some-of-the-amazing-benefits-of-apple-cider-vinegar(ஆப்பிள் சைடர் வினிகரின் அற்புத பயன்களில் சில...!!) - Health Tips & Hair Tips

Latest Health Tips and Hair tips

Wednesday 13 October 2021

some-of-the-amazing-benefits-of-apple-cider-vinegar(ஆப்பிள் சைடர் வினிகரின் அற்புத பயன்களில் சில...!!)

Apple Cider Vinegar

ஆப்பிள் சைடர் வினிகரின் அற்புத பயன்களில் சில...!!


ஆப்பிள் சைடர் வினிகருடன் சிறிது தேன் கலந்து சிறிது நீர் சேர்த்து அருந்தினால் இருமல் வெகுவாய் கட்டுப்படும். ஆப்பிள் சைடர் பயன் குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.

ஆப்பிள் சைடர் வினிகர்: ஆப்பிள் சைடர் வினிகர் என்பது ஆப்பிள், சர்க்கரை, பீஸ்ட் இவற்றினை சேர்த்து உருவாக்கப்படுவது. சாலட், சட்னி இவற்றில் இதனைச் சேர்ப்பர். ஆப்பிளை பிழிந்து அதன் சாற்றில் சில பொருட்களைச் சேர்த்து இதனை உருவாக்குவர். 
 
காரணம் பொதுவில் வினிகர் என்றாலே தொண்டையில் கெட்ட பாக்டீரியாக்களை அழிக்க வல்லது. ஆப்பிள் சைடர் வினிகருடன் சிறிது தேன் கலந்து சிறிது நீர் சேர்த்து அருந்தினால் இருமல் வெகுவாய் கட்டுப்படும். 
 
சிறிதளவு அதாவது ஒரு டீஸ்பூன் ஆப்பிள் சைடர் வினிகர் இதனை 1/2 கப் வெது வெதுப்பான நீரில் கலந்து விருந்து போன்ற அதிக உணவிற்கு முன்பு எடுத்துக் கொள்கின்றனர். இதனால் வயிற்றில் உப்பிசம் ஏற்படாது.
 
நெஞ்செரிச்சல் பிரச்சினை இருப்பவர்களையும் 1 டீஸ்பூன் ஆப்பிள் சைடர் வினிகர் சிறிது தேன் மற்றும் 1/2 கப் வெதுவெதுப்பான நீர் கலந்து குடிக்கச் சொல்கின்றனர்.
 
கால்களை சுத்தம் செய்யும் பொழுது பூஞ்சை பாதிப்பு ஏற்படாதிருக்க வெதுவெதுப்பான நீரில் 1/2 கப் ஆப்பிள் சைடர் வினிகர் சேர்த்து கால்களை 15 நிமிடம் ஊறவையுங்கள். பின்னர் கால்களை நன்கு கழுவி விடுங்கள்.
 
1 டீஸ்பூன்ஆப்பிள் சைடர் வினிக 1/2 கப் வெதுவெதுப்பான நீர் அருந்துவது சைனஸ் தொந்தரவிற்கு மருந்தாக இயற்கை வைத்தியம் கூறுகின்றது.


No comments:

Post a Comment