vegetables-suitable-for-diabetes(நீரிழிவு நோய்க்கு உகந்த காய்கறிகள்) - Health Tips & Hair Tips

Latest Health Tips and Hair tips

Thursday 14 October 2021

vegetables-suitable-for-diabetes(நீரிழிவு நோய்க்கு உகந்த காய்கறிகள்)

Vegetables

நீரிழிவு நோய்க்கு உகந்த காய்கறிகள்

நீரிழிவால் பாதிக்கப்பட்டவர்கள், எந்த காய்கறிகளை சாப்பிட்டால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்த முடியும் என்பதைப் பற்றி தெரிந்து கொள்வோம்.
பாகற்காய்

நீரிழிவு நோயாளிகளுக்கு பாகற்காய் ஒரு வரப்பிரசாதம் என்று சொல்லலாம். ஏனெனில் இந்த பாகற்காய் ஜூஸை காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடித்து வந்தால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு கட்டுப்படும்.

வெந்தயக் கீரை
கீரை வகைகளில் வெந்தயக் கீரையை சாப்பிட்டு வந்தால், நீரிழிவைத் தடுக்கலாம். இந்தக் கீரையில் உள்ள லேசான கசப்பு சுவையானது, இரத்தத்தில் உள்ள குளுக்கோஸின் அளவை குறைக்கிறது.

வெண்டைக்காய்

வெண்டைக்காயை நறுக்கும் போது வரும் ஒருவித பசை போன்ற நீர்மம், நீரிழிவைக் கட்டுப்படுத்தும். அதற்கு இரவில் தூங்கும் போது வெண்டைக்காயை இரண்டாக கீறி, ஒரு டம்ளர் நீரில் ஊற வைத்து, அதிகாலையில் எழுந்ததும், வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.
சுரைக்காய்

இன்சுலின் குறைபாட்டினால் வரும் நீரிழிவை, சுரைக்காயின் சாற்றை எடுத்து, காலையில் குடித்து வர சரியாகும்.

லெட்யூஸ் (Lettuce)

இந்த பச்சை இலைக் காய்கறியில் நார்ச்சத்து அதிகமாகவும், சர்க்கரையின் அளவு குறைவாகவும் உள்ளது. ஆகவே இதனை சாப்பிடுவது நல்லது.
காலிஃப்ளவர்

மற்ற காய்கறிகளைப் போன்று, காலிஃப்ளவர் இனிப்பு சுவையற்றது. ஆகவே இதனை அதிக அளவில் உணவில் சேர்த்து வந்தால், உடலானது நன்கு ஆரோக்கியமாக இருக்கும். இனிப்பு சுவை இல்லாத காய் என்பதால, நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் ஏற்றது.

பூசணிக்காய்
அனைவருக்குமே பூசணிக்காய் இனிப்பு சுவையுடையது என்பது தெரியும். ஆனால் அவற்றில் கிளைசீமிக் இன்டெக்ஸ் மிகவும் குறைவாக இருக்கும். எனவே தான் இது நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்ற ஒரு காய்கறி.

பிரெஞ்சு பீன்ஸ்

பிரெஞ்சு பீன்ஸில் உள்ள ஊட்டச்சத்துக்கள், உடலில் இன்சுலின் அளவை அதிகரிக்கிறது. எனவே இதனை நீரிழிவு உள்ளவர்கள் உண்டால், நீரிழிவைத் தடுக்கலாம்.

No comments:

Post a Comment