முகத்தை அழகாக்கும் சில அற்புத அழகு குறிப்புகள் !!
முகத்திற்கு பொலிவும், வசீகரமும் சேர்ப்பவை கண்கள். சிலருக்கு அந்த கண்களின் புருவத்தில் தேவையான அளவிற்கு முடி இருக்காது.
இதற்கு சுத்தமான விளக்கெண்ணெயை கொஞ்சமாக எடுத்து புருவ முடிகளிலும், கண்முடிகளிலும் தேய்த்து வந்தால், முடி அடர்த்தியாக
வளரும்.
சோர்வான கண்களுக்கு, ரோஸ் வாட்டரில் நனைத்த காட்டன் பேட், வட்டமாக வெட்டிய வெள்ளரித் துண்டு போன்றவற்றை கண்களின் மேல் வைத்துக்கொள்ளலாம்.
நன்றாகப் பொடியாக நறுக்கிய வெள்ளரித் துண்டுகளையோ அல்லது அதனுடன் கேரட் ஜூஸைக் கலந்தோ கண்களுக்கு அடியில் தடவி வந்தால், கரு வளையங்கள் மறையும்.
உதடுகள்: தினமும் சிறிதளவு ‘வேசலின்’ எடுத்து உங்கள் உதடுகளில் தடவி வந்தால், மென்மையாகவும், வெடிப்புகள் இல்லாமலும் இருக்கும்.
எண்ணெய் பசையுள்ள சருமத்தை ‘வால்நட் ஸ்க்ரப்’ கொண்டும், உலர்ந்த மற்றும் சென்ஸிடிவ் சருமத்தை மிருதுவான ‘பேபி ஆயில்’ கொண்டும் துடைக்கலாம்.
No comments:
Post a Comment