coconut-oil-to-help-keep-lips-soft(உதட்டை மென்மையாக வைத்துக்கொள்ள உதவும் தேங்காய் எண்ணெய் !!) - Health Tips & Hair Tips

Latest Health Tips and Hair tips

Saturday, 13 November 2021

coconut-oil-to-help-keep-lips-soft(உதட்டை மென்மையாக வைத்துக்கொள்ள உதவும் தேங்காய் எண்ணெய் !!)

Coconut Oil

உதட்டை மென்மையாக வைத்துக்கொள்ள உதவும் தேங்காய் எண்ணெய் !!

உதட்டில் வெடிப்புகள் ஏற்படுவதற்கு பல காரணங்கள் உள்ளது. முக்கியமான காரணமாக அமைவது வெப்பநிலை மாற்றங்கள் அல்லது உதட்டை அதிகமாக நாக்கால் தடவுவது. உதட்டிற்கு ஈரப்பதத்தை உண்டாக்க இயற்கையான வழியில் கிடைக்கும் தேங்காய் எண்ணெய்யை பயன்படுத்தலாம்.

தேங்காய் எண்ணெய்யில் பல விதமான கனிமங்கள் அடங்கியுள்ளது. உதட்டிற்கு ஈரப்பதத்தை அளித்திட இது உதவுகிறது. 
 
1 டீஸ்பூன் தேங்காய் எண்ணெய்யுடன் 1 டீஸ்பூன் உப்பை கலந்து ஒரு கிண்ணத்தில் ஊற்றி ஸ்க்ரப்பை தயாரிக்கலாம். பஞ்சுருண்டையை கொண்டு இந்த கலவையை உதட்டில் தடவிக் கொண்டு, பின் உதட்டின் மீது விரல்களை கொண்டு வட்ட வடிவில் ஒரு நிமிடத்திற்கு மென்மையாக மசாஜ் செய்யுங்கள். சிறிது நேரம் கழித்து, உங்கள் உதடு மென்மையாக இருப்பதை உணரலாம். இறுதியில் ஒரு துணியை கொண்டு உதட்டை துடைத்து விட்டு அதனை காய வையுங்கள்.
 
தேங்காய் எண்ணெய்யை உதட்டின் மீது கொஞ்சமாக தடவவுங்கள். பின் மெதுவாக மசாஜ் செய்யவும். ஒரு நாளில் இதனை எத்தனை முறை வேண்டுமானாலும் செய்யலாம். அல்லது உதடு வறண்டு போகும் போதெல்லாம் இதை செய்யலாம்.
 
1 டீஸ்பூன் ஆலிவ் எண்ணெய்யுடன் 1 டீஸ்பூன் தேங்காய் எண்ணெய்யையும் முக்கால் டீஸ்பூன் தேனையும் கலந்து கொள்ளவும். இந்த கலவையை மூடி போட்ட ஜாடியில் போட்டு வைத்துக் கொள்ளலாம். உதட்டிற்கு எப்போதெல்லாம் நீர்ச்சத்து தேவைப்படுகிறதோ, அப்போதெல்லாம் இதனை பயன்படுத்தலாம்.

No comments:

Post a Comment