honey-to-help-correct-respiratory-tract-infection*(சுவாச குழாயில் உள்ள நோய்த்தொற்றுகளை சரிசெய்ய உதவும் தேன் !!) - Health Tips & Hair Tips

Latest Health Tips and Hair tips

Saturday, 13 November 2021

honey-to-help-correct-respiratory-tract-infection*(சுவாச குழாயில் உள்ள நோய்த்தொற்றுகளை சரிசெய்ய உதவும் தேன் !!)

Honey Face Pack

சுவாச குழாயில் உள்ள நோய்த்தொற்றுகளை சரிசெய்ய உதவும் தேன் !!

தேனில் பாக்டீரியாவிற்கு எதிரான பண்புகள் மற்றும் நுண்ணுயிர்களுக்கு எதிரான பண்புகள் இருப்பதால், பாக்டீரியா வளர்ச்சியை தடுக்கும். அதனால் இது வெட்டு காயங்கள், சிராய்ப்புகள், தீக்காயங்கள் ஆகியவற்றை குணப்படுத்த உதவுகின்றது.

தேன் சருமத்தின் மேல் அடுக்கில் நுழைந்து, துகள்களில் ஊடுருவி அசுத்தங்களை நீக்கி சருமத்தை சுத்தப்படுத்துகிறது. இதனால் நோய்த்தொற்று மற்றும் முகப்பரு பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் அளிக்கிறது.
 
தேன் ஒரு நல்ல மாய்ஸ்சுரைசர். ஏனெனில் இதனை சருமத்திற்கு பயன்படுத்தினால், சருமத்தில் உள்ள ஈரப்பதமானது தக்க வைக்கப்படுவதோடு, சருமத்தை மிருதுவாக்கி அதன் நெகிழ்வு தன்மையை தக்க வைக்கிறது.
 
தேனை சருமத்திற்கு உபயோகித்தால், அது சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கி, சரும சுருக்கம் ஏற்படாமல் பாதுகாக்கிறது. காயங்களை சுத்தப்படுத்தி, நாற்றம் மற்றும் சீழ் உண்டாவதை தடுத்து, வலியை குறைத்து காயம் விரைவாக குணமடையவதற்கு உதவுகிறது.
 
தேனானது சேதமடைந்த சருமத்தை சீர்படுத்தி புதிய செல்கள் உருவாவதற்கு உதவுகிறது. அதிலும் சரும அழற்சி, மற்றும் சரும பிரச்சனைகளை  சரிப்படுத்த உதவுகிறது.
 
தேனில் குளுக்கோஸ் மற்றும் ஃபுருக்டோஸ் நிறைந்துள்ளன மற்றும் தாதுக்களான மெக்னீசியம், பொட்டாசியம், கால்சியம், சோடியம் குளோரின், சல்பர், இரும்பு மற்றும் பாஸ்பேட் போன்றவைகளும் நிறைந்துள்ளன.
 
தேனில் சளி நீக்கும் பண்பு மற்றும் ஆறுதல் அளிக்கும் தன்மை இருப்பதால், சுவாசக் குழாயில் இருக்கும் நோய்த்தொற்றுகளை சரிசெய்கிறது.

No comments:

Post a Comment