some-medical-tips-to-heal-heel-cracks-quickly(குதிகால் வெடிப்பு விரைவில் குணமாக சில மருத்துவ குறிப்புக்கள் !!) - Health Tips & Hair Tips

Latest Health Tips and Hair tips

Friday 12 November 2021

some-medical-tips-to-heal-heel-cracks-quickly(குதிகால் வெடிப்பு விரைவில் குணமாக சில மருத்துவ குறிப்புக்கள் !!)

Heel pain

குதிகால் வெடிப்பு விரைவில் குணமாக சில மருத்துவ குறிப்புக்கள் !!

2 டேபிள் ஸ்பூன் அரிசி மாவு, ஒரு டீஸ்பூன் தேன் மற்றும் 5-6 துளிகள் வினிகரை சேர்த்து நன்கு பேஸ்ட் போல் கலந்து கொள்ள வேண்டும். 

பின் பாதங்களை வெதுவெதுப்பான நீரில் பத்து நிமிடம் ஊற வைத்து, பின் தயாரித்து வைத்துள்ள பேஸ்ட் கொண்டு பாதங்களை மென்மையாக தேய்க்க வேண்டும். அதன் பின் பாதங்களை கழுவ வேண்டும். இப்படி வாரத்திற்கு 2-3 முறை செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.
 
சமையல் எண்ணெய்கள் எளிதில் சருமத்தால் உறிஞ்சக்கூடியவை. வெஜிடேபிள் ஆயிலில் உள்ள வைட்டமின் ஏ, வைட்டமின் டி மற்றும் வைட்டமின் ஈ போன்ற சத்துக்கள், சருமத்திற்கு புத்துணர்ச்சி அளிப்பதோடு, புதிய செல்களை உருவாக்குவதன் மூலம் குதிகால் வெடிப்புகளை சரிசெய்யும்.
 
முதலில் பாதங்களை நன்கு சுத்தமாக கழுவி உலர்த்திக் கொள்ள வேண்டும். பின் வெஜிடேபிள் ஆயிலை பாதங்களில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்ய வேண்டும். அதன் பின் கால்களில் சௌகரியமான சாக்ஸ் அணிந்து கொள்ள வேண்டும். இப்படி தினமும் இரவு தூங்கும் முன் செய்து வர, குதிகால் வெடிப்பு விரைவில் குணமாகும்.
 
எலுமிச்சையில் அசிட்டிக் பண்புகள் உள்ளன. இத்துடன் ஈரப்பசையூட்டும் பண்புகளைக் கொண்டு வாஸ்லின் சேர்த்து பயன்படுத்தும் போது, அது பாதங்களில் உள்ள வறட்சி தடுக்கப்படுவதோடு, குதிகால் வெடிப்புகளும் விரைவில் குணமாகும்.
 
முதலில் வெதுவெதுப்பான நீரில் பாதங்களை ஒரு பதினைந்து நிமிடம் ஊற வைத்து, பின் நன்கு பாதங்களை உலர்த்திக் கொள்ள வேண்டும். பின்பு ஒரு டீஸ்பூன் வாஸ்லின் மற்றும் சில துளிகள் எலுமிச்சை சாற்றினை ஒன்றாக கலந்து, பாதங்களில் மட்டுமின்றி, அதிகம் வறட்சியடையும் பகுதிகளிலும் தடவிக் கொள்ள வேண்டும்.

பின் கால்களில் உல்லன் சாக்ஸ் அணிந்து இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் பாதங்களைக் கழுவ வேண்டும். இப்படி தினமும் இரவு தூங்கும் முன் செய்ய, குதிகால் வெடிப்புகள் மாயமாய் மறையும்.

No comments:

Post a Comment