மிளகாயில் உள்ள சத்துக்கள் என்ன...? அவை எதற்காக பயன்படுகிறது...?
பச்சை மிளகாயில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் கே போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.
மிளகாயில் அதிக அளவில் உள்ள கயேன் என்ற பொருள், வயிற்றில் ஹைட்ரோ குளோரிக் அமிலம் சுரப்பதற்கு பெரிய உதவியாக விளங்குகிறது.
பச்சை மிளகாயில் கலோரிகள் மிகக் குறைவு. இது உடலில் மெட்டபாலிசத்தை அதிகரிக்கும். பச்சை மிளகாயில் உள்ள பீட்டா கரோட்டின் இதய செயல்பாட்டை முறையாக பராமரிக்க உதவுகிறது. மேலும் ரத்தத்தில் உள்ள கொழுப்பு மற்றும் ட்ரைகிளிசரைட் அளவையும் குறைக்கிறது. இதய நோய் அபாயத்தை குறைக்கிறது.
மிளகாயில் அதிக
அளவு சுண்ணாம்புச்சத்து உள்ளது. கால்சியம் என்பது திடமான பற்களுக்கும் எலும்புகளுக்கும் தேவைப்படுகிறது. உடல் பருமன் பிரச்சனை உள்ளவர்களுக்கும், சர்க்கரை நோயால் அவதிப்படுபவர்களுக்கும், மிளகாய் உட்கொள்ளுதல் நல்ல பயனை கொடுக்கும்.
உடம்பில் உள்ள இரத்த ஓட்டத்திற்கு பெரிதும் உதவியாக இருந்து, வாதம் ஏற்படாமல் காப்பதில் மிளகாய் முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும், மிளகாயில் இருந்து வெளிப்படும் வெப்பம், கலோரிகள் உட்கொள்ளும் அளவை அதிகரித்து, கொழுப்புகளை கரைக்க உதவுகிறது.
வயிற்றுப் புண், தொண்டை புண், அல்சர் போன்ற பிரச்சனை உள்ளவர்கள் பச்சைமிளகாயை தவிர்ப்பது நல்லது. பச்சை மிளகாயை நேரடியாக உட்கொள்ள முடியாது. நாம் சாப்பிடும் உணவுகளில் சற்று அதிகமாக சேர்த்துக் கொள்ள வேண்டும்.
பச்சை மிளகாயை அதிகம் சேர்த்துக் கொண்டால் சிலருக்கு அடிவயிற்று வலி
அல்லது வயிற்றுப்போக்கு உருவாகலாம். எனவே இதை அளவோடு பயன்படுத்த வேண்டும்.
No comments:
Post a Comment