what-are-the-nutrients-in-green-peas(பச்சை பட்டாணியில் உள்ள சத்துக்கள் என்ன...?) - Health Tips & Hair Tips

Latest Health Tips and Hair tips

Friday, 12 November 2021

what-are-the-nutrients-in-green-peas(பச்சை பட்டாணியில் உள்ள சத்துக்கள் என்ன...?)

Green Peas

பச்சை பட்டாணியில் உள்ள சத்துக்கள் என்ன...?

தினமும் அல்லது வாரத்திற்கு மூன்று அல்லது நான்கு முறை பச்சை பட்டாணி சாப்பிடுபவர்களுக்கு நார்ச்சத்து அதிகம் கிடைப்பதால் செரிமான கோளாறுகள் ஏதும் ஏற்படாமல் தடுக்கிறது.

பச்சை பட்டாணியில் பீட்டா குலுக்கன் சத்து அதிகம் நிறைந்திருக்கிறது. இதை சாப்பிடுவதால் உடலில் கொலஸ்ட்ரால் படிவதை தடுக்கிறது. உடல் எடை அதிகமாகாமல் தடுக்கிறது.
 
பச்சை பட்டாணியில் ரத்தத்தில் இருக்கும் சிவப்பு ரத்த அணுக்களின் பெருக்கத்தை தூண்டும் சத்துகள் அதிகமுள்ளது. இதை தொடர்ந்து சாப்பிடுபவர்களுக்கு ரத்த சோகை பிரச்சனை நீங்கும்.
 
ஊட்டச்சத்துக்கள் நிறைந்த காய்கறிகளில் பச்சை பட்டாணியும் உண்டு. பச்சை பட்டாணி குருமா, வெஜிடபிள் பிரியாணி போன்ற உணவு வகைகளில் பயன்படுத்தப்படுகிறது. 
 
பச்சை பட்டாணியில் உடலுக்கு அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களான வைட்டமின்கள், புரதங்கள், நார்ச்சத்து போன்றவை நிறைந்திருக்கின்றன. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பச்சை பட்டாணி சாப்பிடுவதால் சுலபமாக உடலுக்கு ஊட்டச்சத்து கிடைத்து விடுகிறது.
 
பச்சை பட்டாணி சாப்பிடுபவர்களுக்கு இவை அதிகம் கிடைப்பதால் இதயம் சம்பந்தமான பாதிப்புகள் ஏற்படுவதை தடுக்கிறது.
 
பச்சை பட்டாணியில் வைட்டமின் கே சத்து அதிகம் உள்ளது. இதை தொடர்ந்து சாப்பிடுபவர்களுக்கு மூளை செல்கள் புத்துணர்வு பெற்று ஞாபகத் திறன் அதிகரித்து அல்சைமர் நோய் ஏற்படாமல் தடுக்கிறது.

No comments:

Post a Comment