சுக்கு திரிகடுகங்களில் ஒன்று. "சுக்குக்கு மிஞ்சிய மருந்துமில்லை. சுப்ரமணியருக்கு மிஞ்சிய தெய்வமில்லை”
* சுக்கு, மிளகு, அதிமதுரம் ஆகியவற்றை நீரில் இட்டு ஊற வைத்து, சிறிது நேரம் கழித்து வடிகட்டி குடித்து வர இருமல், சளி, தொண்டைக் கட்டு குணமாகும்.
* சுக்கு, திப்பிலி, அதிமதுரம், ஏலக்காய் ஆகியவற்றை சேர்த்து பாத்திரத்தில் இட்டு காய்ச்சி வடிகட்டி குடித்து வர காய்ச்சல் குணமாகும்.
*ஒரு துண்டு சுக்கை கால் லிட்டர் நீரில் இட்டு பாதியாக
காய்ச்சி, பால், சீனி சேர்த்து இருவேளை சாப்பிட்டு வர வாயு
அகலும், பசி உண்டாகும். தலை சம்பந்தப்பட்ட நோய்கள் சிதளம் குடல்புண், வயிற்றுவலி, பல்வலி, ஆசனவலி, ஆஸ்துமா
ஆகியவை குணமாகும்.
No comments:
Post a Comment