* குப்பைமேனி *
* முழுத்தாவரமும் மூச்சுக்குழல் மற்றும் ஆஸ்துமா நோய்க்கு மருந்தாகிறது. வயிற்றுப் பூச்சிகளுக்கு எதிரானது. வாந்தியை தூண்டுவது. சிறுநீர்ப்போக்கு தூண்டி, சளி அகற்றும். இலைகள் தோல் வியாதிகளுக்கு மேல் பூச்சாகிறது. சொறி, படுக்கைபுண் மற்றும் நாட்பட்ட புண்களை ஆற்றுகிறது. மலமிளக்கி, இலைச்சாறு, எண்ணெய் கலந்து முடக்குவாதம், மூட்டுவலிக்குத் தடவப்படும். வேர்ச்சூரணம் 1 லிட்டர் நீரில் 1 பிடி போட்டு 8ல் ஒன்றாய்க் காய்ச்சிக் கொடுக்க நாடாய்புழு, நாக்குப் பூச்சி நீங்கும். வயிற்றுப் போக்கு உண்டாகும். சிறுவர்களுக்கு பாதியளவு கொடுக்கவும்.

No comments:
Post a Comment