Medical bar for heart attack!(மாரடைப்புக்கு ஏத்தது மருதம் பட்டை!) - Health Tips & Hair Tips

Latest Health Tips and Hair tips

Tuesday, 29 June 2021

Medical bar for heart attack!(மாரடைப்புக்கு ஏத்தது மருதம் பட்டை!)

Medical bar for heart attack!(மாரடைப்புக்கு ஏத்தது மருதம் பட்டை!

இந்தக் காலத்துவ மாரடைப்பும் நெஞ்சுவலியும் இளகங்களைக்கூட தாக்க ஆரம்பிச்சிடுச்சி சரியான உணவுப் பழக்கம் இல்லாம போறதுதான் இதுக்கெல்லாம் காரணம். ஒட்டுமொத்த நோயும் ஒரே நேரத்துல வந்து உடம்பை உலுக்கி போட்டுரும் இதுலயிருந்து தப்பிக்கறதுக்கு சில வைத்திய முறைங்களைத் தெரிஞ்சுக்கிடுங்கூட!
நாட்டு மருந்து கடையில 'அமுக்கிராங்கிழங்கு'னு ஒண்ணு விக்கிறாங்க அதைக் கொஞ்சமா எடுத்துக்கிட்டு, சின்னச் சின்ன துண்டுகளா வெட்டி வெச்சுக்கிடணும், மண் சட்டியில் பாலை ஊத்தி, துணியால வேடு கட்டி. அதுக்கு மேல (துணியின் மேல்) கிழங்கைப் போட்டு, ஆவியிலயே நல்லா வேக வெச்சு எடுக்கணும். பிறகு, இதை வெயில்ல காய வெச்சு பொடியாக்கிக்கணும். அதுல ஒன்றரை ஸ்பூள் எடுத்து, தேன்ல குழைச்சு, தினமும் காலையில, சாயங்காலம்னு ரெண்டு வேளைக்கு வெறும் வயித்துல சாப்பிடணும். இப்படித் தொடர்ந்து ஒரு மண்டலம் (48 நாள்) சாப்பிட்டு வந்தா... நெஞ்சுவலி, படபடப்பு. மார்பு எரிச்சல் எல்லாம் ஓடியே போயிரும்.
செம்பரத்தம்பூ வைத்தியமும் கைவசம் இருக்கு. இதுல ஏழு பூவை எடுத்து, ஒண்ணரை டம்ளர் தண்ணி விட்டு, அடுப்புல ஏத்திக் காய்ச்சணும். இது அரை டம்ளரா குறுக்கினதும், ஒரு ஸ்பூன் பளங்கல்கண்டு சேர்த்து, திரும்பவும் காய்ச்சணும். பிறகு, இதை ரெண்டு பாகமா பிரிச்சிக்கிட்டு... காலையில, சாயங்காலம்னு ஒரு மண்டலத்துக்கு ரெண்டுவேளை குடிச்சிட்டு வந்தா நல்லா குணம் தெரியும். முதல் வாரத்திலயே குணம் தெரிய ஆரம்பிச்சிரும்.

செம்பரத்தம்பூ கிடைக்காட்டி. 10 செம்பருத்திப்பூவைப் பயன்படுத்தியும் இதேபோல செய்து குடிச்சிட்டு வரலாம். அப்புறம், வெள்ளைத் தாமரைப்பூவுலயும்கூட இதைச் செய்யலாம். இந்தப் பூ பெருசா இருக்கும்கிறதால. முழு பூ. இல்லைனா— அரை பூ இருந்தாலே போதும்,

நாட்டு மருந்து கடையில மருதம்பட்டை'னு கேட்டா கொடுப்பாங்க. அதை 10 கிராம் வாங்கிட்டு வந்து... சின்னதா வெட்டி, புது மண்சட்டியில போட்டு, ஒரு டம்ளர் தண்ணி விட்டு,

கால் டம்ளரா காய்ச்சி வடிகட்டிக்கணும், இந்தத் தண்ணிய தினமும் ஒரு மண்டலத்துக்கு காலையில், சாயங்காலம் 25 Iod அளவுக்குக் குடிச்சிட்டு வந்தா... மாரடைப்பும், நெஞ்சுவலியும் நீங்கிரும்.

ஒரு தடவை பயன்படுத்தின மருதம்பட்டையையே மூணு நாளைக்குத் திரும்பத் திரும்ப தண்ணி விட்டு காய்ச்சிக்கலாம். அந்த அளவுக்கு அதுல காரம் இருக்கும்.

ஒரு பாத்திரத்துல ரெண்டு டம்ளர் தண்ணியை எடுத்துக்கிட்டு, அதுல் ஒரு கைப்பிடி துளசி இலையப் போடுங்க. பத்து கிராமோ. பதினஞ்சி கிராமோ. பனங்கல்கண்டையும் சேர்த்துக்கோங்க ஒரு டம்ளரா ஆகுற வரைக்கும் காய்ச்சி வடிகட்டுங்க. இதுல 4 ஸ்பூன் 'தேனை கலந்து காலை, மதியம், மாலைறு மூறு வேளையும் சாப்பாட்டுக்கு முன்ன குடிங்க இப்படியே தொடர்ந்து ரெண்டு, மூணு நாள் குடிச்சிட்டு வந்தா நெஞ்சு வலி ஏற்றுமதி ஆகி, நிம்மதி இறக்குமதியாகும்.

No comments:

Post a Comment