ingredients-that-help-to-brighten-the-face-naturally(இயற்கையான முறையில் முகம் பொலிவடைய உதவும் பொருட்கள் !!) - Health Tips & Hair Tips

Latest Health Tips and Hair tips

Friday, 12 November 2021

ingredients-that-help-to-brighten-the-face-naturally(இயற்கையான முறையில் முகம் பொலிவடைய உதவும் பொருட்கள் !!)

Beauty tips 1

இயற்கையான முறையில் முகம் பொலிவடைய உதவும் பொருட்கள் !!

மஞ்சள் மற்றும் கடலைமாவை பால் அல்லது தண்ணீரில் கலந்து முகத்தில் பூசி, 15 அல்லது 20 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவவும். இது முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை நீக்கி பொலிவைத் தரும்.

தக்காளி கொண்டு ஒரு ஸ்க்ரப் செய்ய, தக்காளி மற்றும் சர்க்கரை எடுத்துக் கொள்ளுங்கள். சர்க்கரையால் செய்யப்பட்ட ஸ்க்ரப் பயன்படுத்துவதன் மூலம் இறந்த சரும செல்கள் எளிதில் அகற்றப்படும்.
 
தேங்காய் எண்ணெயையும் சர்க்கரையையும் கலந்து முகம் மற்றும் கழுத்துப் பகுதிகளில் தடவவும். இதை வாரந்தோறும் செய்து வந்தால் சருமத்தில் உள்ள இறந்த செல்கள் அகற்றப்பட்டு, முகம் பொலிவு பெரும். 
 
சோற்றுக்கற்றாழையின் சதையை நன்கு அறைத்து ஒரு சிட்டிகை மஞ்சள், ஒரு தேக்கரண்டி பால் மற்றும் ஒரு தேக்கரண்டி தேனைக்கலந்து முகத்தில் பூசவும். இது முகத்தின் சூட்டை தனித்து சருமத்தை மிருதுவாக்கும்.
 
அரிசி மாவு சிறந்த ஸ்க்ரப்பராக நம்முடைய தோல் பகுதிக்கு இருக்கும். பால் முகத்தில் இருக்கும் அதிகப்படியான எண்ணெயை நீக்கும். எலுமிச்சை நுண்கிருமிகளை அழித்து முகத்தை சுத்தமுடன் ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும். இந்த மூன்றையும் கலந்து முகத்திற்கு தினமும் ஸ்கரப் செய்து வந்தால் முகம் பளிச்சென்று ஜொலிக்கும்.
 
எலுமிச்சை சாறை சர்க்கரையுடன் சேர்த்து கருமை ஏற்பட்ட இடங்களில் தடவவும். இது சருமம் கருமை அடைவதை நாளடைவில்  குணப்படுத்தி விடும்.
 
பப்பாளியை நன்கு மசித்து தேன் மற்றும் முல்தானி மட்டி அல்லது இழைத்த சந்தனத்துடன் கலந்து முகத்தில் பூசவும். இது சருமத்தை மிருதுவாக்குவதுடன் பொலிவையும் கூட்டும்.

No comments:

Post a Comment