let-s-see-the-benefits-of-eating-mushrooms(காளான் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து பார்ப்போம் !!) - Health Tips & Hair Tips

Latest Health Tips and Hair tips

Friday, 12 November 2021

let-s-see-the-benefits-of-eating-mushrooms(காளான் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து பார்ப்போம் !!)

Mushrooms

காளான் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து பார்ப்போம் !!

காளான் சாப்பிடுவதால் ஏற்படும் பல வகையான நன்மைகள் குறித்து இங்கு காணலாம். காளான் பயன்கள் செலினியம் காளான் செலினியம் எனப்படும் ரசாயன மூலக்கூறுகளை அதிகம் கொண்டது. 

காளான் சாப்பிடுபவர்களுக்கு உடலில் இந்த செலினியம் சத்து அதிகரித்து உடலின் எலும்புகளின் உறுதித்தன்மையை அதிகப்படுத்துகிறது. பற்கள், நகங்கள், தலைமுடிகள் வளர்ச்சிக்கும் உறுதுணை புரிகிறது. ஆண்களுக்கு உயிரணுக்களை அதிகப்படுத்தி மலட்டு தன்மையை நீக்குகிறது. 
 
இரும்பு மற்றும் செம்பு சத்து உடலிலில் ஓடும் ரத்தத்திற்கு இரும்பு சத்து மிகவும் அவசியம் ஆகும். இந்த இரும்புச்சத்து உடலுக்கு வலுசேர்த்து காயங்களிலிருந்து உடலை வேகமாக ஆற்றும் வேலையை திறம்பட செய்கிறது. 
 
காளான் இந்த இரண்டு சத்துக்களையும் அதிகம் கொண்டது. ரத்த அழுத்தம் உணவாக உண்ணப்படும் காளான்களில் பலவகைகள் உள்ளன. அனைத்து காளானிலும் பொட்டாசியம் சத்து அதிகம் நிறைந்திருக்கிறது. பொட்டாசியம் நரம்புகள் மற்றும் ரத்த நாளங்களில் இருக்கும் இறுக்கத்தை தளர்த்தி ரத்த அழுத்தம் உயராமல் தடுக்கிறது. 
 
வாரமொரு முறை காளான் உணவுகளை சாப்பிடுவதால் ரத்த அழுத்த பிரச்சனைகள் குறையும். உடல் எடை உடல் எடை அதிகரிப்பது ஒரு கவலைக்குரிய பிரச்சனை ஆகும். உணவு கட்டுப்பாட்டுடன் உடற்பயிற்சி செய்து உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள், கொழுப்பு இல்லாத நார்ச்சத்து நிறைந்த காளான் கொண்டு செய்யப்பட்ட உணவுகளை அதிகம் சாப்பிட்டு வருவது உடல் எடையை குறைக்கும் முயற்சியில் நல்ல பலன் அளிக்கும். 
 
உடலுக்கு தேவையான கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் சத்துக்களையும் காளான் கொண்டிருப்பதால், அதை தொடர்ந்து சாப்பிட்டு வருபவர்களுக்கு உடலுக்கு தேவையான சக்தியை தருகிறது. 
 
காளான் இரும்பு சத்து அதிகம் கொண்டது. இதில் நிறைதிருக்கும் இரும்புச்சத்துகளை நமது உடல் விரைவாக ஏற்றுக்கொள்வதால் ரத்தத்தில் சிவப்பு ரத்த அணுக்களின் உற்பத்தி அதிகரித்து, ரத்த சோகை குறைபாடு நீங்கி உடல் பலம் பெற தொடங்கும்.

No comments:

Post a Comment