*சுண்டைக்காய்*
இது கோழையகற்றியாகவும், வயிற்றுப் பூச்சி கொல்லியாகவும் செயல்படும்.
* பால் சுண்டைக் காயைச் சமைத்து உண்ணக் கபக்கட்டு, ஈளை, காசம், இருமல், மூலச்சூடு, மூலக்கடப்பு, திமிர்ப் பூச்சி முதலியன தீரும்.
* சுண்டைக்காயை உப்பு கலந்த புளித்த மோரில் 2 முறை ஊற வைத்து, காய வைத்து எண்ணெயில் வறுத்து இரவு உணவில் பயன்படுத்தி வர மார்புச்சளி, ஆஸ்துமா, காச நோய் தீருவதுடன் வயிற்றுப் போக்கு நின்று விடும்.
* சுண்டை வற்றல், மிளகு, சீரகம், வெந்தயம், கருவேப்பிலை, இளவறுப்பாய் வறுத்த உப்பு சேர்த்து சூரணித்து உணவில் கலந்து சாப்பிடப் பசி மந்தம், சுவையின்மை, மலக்குடல் கிருமிகள், மூலம் ஆகியவை தீரும்.
சுண்டை வற்றல், நெல்லி வற்றல், சுக்கு, வெந்தயம், ஓமம், மாதுளை ஓடு, மாம்பருப்பு, கருவேப்பிலை, சீரகம் வறுத்து இடித்த சூரணம் காலை, மாலை 2 சிட்டிகை மோரில் சாப்பிட்டு வர பேதி, மூலம், பசியின்மை, மார்புச்சளி தீரும்.
No comments:
Post a Comment