உணவில் உள்ள ஊட்டச்சத்துக்கள் பற்றி மக்களிடம் நிலவும் கட்டுக்கதைகளும் உண்மைகளும்...
இந்த கொரோனா வைரஸ் தொற்று காலம் நமக்கு சில வாழ்க்கை முறை மாற்றங்களை கற்று தந்துள்ளது. அவை தான் சுய பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியமான உணவு முறையை பின்பற்றுவது ஆகும். சமீபத்தில் நம்முடைய இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் உணவுப் பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து பற்றிய கட்டுக்கதைகளை பதிவு செய்துள்ளது. இதன் படி பெரும்பாலான கட்டுக்கதைகள் இன்றளவும் மக்களிடையே நிலவி வருவதாகவும், அதை மக்கள் நம்பி வருகிறார்கள் என்று தெரிவித்து உள்ளது. குறிப்பாக உடல் எடையை குறைக்க வேண்டும் என்ற விஷயத்தில் மக்கள் உணவை தவிர்ப்பது குறைந்த கலோரி உணவை எடுப்பது போன்ற விஷயங்களை பின்பற்றி வருகிறார்கள். ஆனால் உண்மையில் இந்த மாதிரியான செயல்கள் உங்க உடல் எடையை குறைக்காது என்றும் இது ஒரு கட்டுக்கதை என்றும் உணவு பாதுகாப்பு நிர்ணயம் கூறியுள்ளது. இப்படி மக்களிடையே உணவைப் பற்றி நிலவும் கட்டுக்கதைகளை பற்றித் தான் நாம் இப்பொழுது பார்க்க போகிறோம்.
சமச்சீரான உணவு, சிறு பகுதி உணவுகளை எடுத்துக் கொள்வது, சரியான நேர இடைவெளியில் உணவை சாப்பிடுவது, தொடர்ச்சியான உடற்பயிற்சி இவைகள் தான் உடல் எடையை குறைக்க உதவும். நீங்கள் உணவைத் தவிர்த்தாலோ அல்லது
குறைந்த கலோரி உணவுகளை எடுத்துக் கொள்வது போன்றவை எந்த பலனையும் அளிக்காது. இது உங்களுக்கு ஊட்டச்சத்து பற்றாக்குறையை ஏற்படுத்தி பல வித உடல் பிரச்சினைகளுக்கு வழி வகுத்துவிடும் என்ற உண்மையை புரிந்து கொள்ளுங்கள்.
No comments:
Post a Comment