Millets From Portion To Hydration And Simple Recipeசிறுதானியங்கள் எவ்வளவு நல்லது... அதை விதவிதமாக எப்படி சமைக்கலாம்... - Health Tips & Hair Tips

Latest Health Tips and Hair tips

Saturday, 31 July 2021

Millets From Portion To Hydration And Simple Recipeசிறுதானியங்கள் எவ்வளவு நல்லது... அதை விதவிதமாக எப்படி சமைக்கலாம்...

சிறுதானியங்கள் எவ்வளவு நல்லது... அதை விதவிதமாக எப்படி சமைக்கலாம்...


பொதுவாக சத்தான உணவு என்று நினைக்கும் போது நம் நினைவுக்கு வருவது சிறு தானியங்கள் தான். ஆனால் எப்பொழுது பார்த்தாலும் சிறு தானியங்களையே எடுத்துக் கொண்டு இருக்க முடியாது. அது நம் உணவு முறையில் ஒரு சலிப்பை ஏற்படுத்தி விடும். எப்படி சலிக்காமல் இந்த சிறு தானிய உணவை பின்பற்றலாம் என பார்ப்போம்.
சிறு தானியங்களில் மிகவும் சத்தான தானியம் தான் தினை அரிசி. தினை அரிசி நமக்கு ஏராளமான ஊட்டச்சத்துக்களை அளிக்கக் கூடிய சிறு தானியமாகும். அதனால் தான் அந்த காலத்தில் நம் முன்னோர்கள் தினை மாவால் செய்யப்பட்ட திண்பண்டங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தனர். தினை அரிசி ஒரு பசையம் அல்லாத உணவாகும். இதில் நிறைய ஆன்டி ஆக்ஸிடன்கள் காணப்படுகின்றன. இதில் நிறைய அத்தியாவசியமான அமினோ அமிலங்கள் காணப்படுகிறது. உங்களுக்கு அதிகமான கால்சியம் சத்தை தர உதவுகிறது. இதனால் எலும்பு மற்றும் பற்கள் வலிமைக்கு தினை அரிசி சிறந்த தேர்வாகும்.

நம்முடைய மக்கள் தொகையில் 97% மக்கள் பசையம் உணர்திறன் கொண்டவர்களாக இருக்கின்றனர். எனவே பசைய அழற்சி இருப்பவர்கள் தினை உணவுகளை எடுத்துக் கொள்வது நல்லது. இருப்பினும் இந்த தினை உணவுகளை எப்படி எடுத்துக் கொள்ளலாம்.தினையை நன்றாக ஊற வைத்து சமைத்து சாப்பிட வேண்டும். எனவே தினையை குறைந்தது 6-8 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். ஊற வைக்கும் போது தினை அரிசியை சீக்கிரமாக வேக வைக்க முடியும். இதனால் சமைக்கும் நேரம் குறையும்.
10 நாட்களில் மூன்று முறைக்கு மேல் எப்பொழுது பார்த்தாலும் தினை போன்ற புளித்த கஞ்சியையே எடுத்துக் கொள்ளாதீர்கள். புளித்த கஞ்சி உங்க குடலில் வளரும் நல்ல பாக்டீரியாக்களுக்கு நல்லது என்றால் கூட அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். எனவே தினை கஞ்சியை தவிர விதவிதமான தினை உணவு வகைகளை உண்ணலாம்.
பதப்படுத்தப்பட்ட தினை மாவு, தினை சேமியா, தினை ப்ளாக்ஸ்யை பயன்படுத்த வேண்டாம். முடிந்த வரை நீங்களே தினை மாவை தயாரியுங்கள்.

No comments:

Post a Comment