How To Protecting From A Lack Of Vitamin D According To Ayurveda விட்டமின் டி பற்றாக்குறை இருக்கா?... கவலைய விடுங்க... ஆயுர்வேதம் சொல்ற இந்த வழியை பின்பற்றுங்க... - Health Tips & Hair Tips

Latest Health Tips and Hair tips

Saturday, 31 July 2021

How To Protecting From A Lack Of Vitamin D According To Ayurveda விட்டமின் டி பற்றாக்குறை இருக்கா?... கவலைய விடுங்க... ஆயுர்வேதம் சொல்ற இந்த வழியை பின்பற்றுங்க...

விட்டமின் டி பற்றாக்குறை இருக்கா?... கவலைய விடுங்க... ஆயுர்வேதம் சொல்ற இந்த வழியை பின்பற்றுங்க...

விட்டமின் டி என்பது நம் உடலுக்கு மிக முக்கியமான ஊட்டச்சத்து ஆகும். ஆனால் இந்த விட்டமின் டி பற்றாக்குறையால் ஆண்டு தோறும் நிறைய மக்கள் பாதிப்படைகின்றனர். விட்டமின் டி என்பது 'சூரிய ஒளி விட்டமின்' என்று அழைக்கப்படுகிறது. ஏனெனில் இந்த விட்டமின் டியை நீங்கள் சூரிய ஒளியில் இருந்து அதிகமாக பெற முடியும். இந்த விட்டமின் டி நம் உடலுக்கு நிறைய வேலைகளை செய்கிறது. கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற சத்துக்களை உறிஞ்ச உதவுகிறது.

விட்டமின் டி தான் எலும்பு ஆரோக்கியத்திற்கும் வலிமைக்கும் அவசியம். பற்கள் மற்றும் எலும்பு வளர்ச்சிக்கு உதவுகிறது. விட்டமின் டி பற்றாக்குறை இருப்பவர்களுக்கு எலும்பு தேய்மானம் மற்றும் எலும்பு முறிவு ஏற்படலாம். நம்முடைய நோயெதிர்ப்பு மண்டலமும் பலவீனமாகும். இது போக விட்டமின் டி பற்றாக்குறை சளி, காய்ச்சல் மற்றும் பல்வேறு வகையான புற்றுநோய்களை ஏற்படுத்தும். இது சோர்வு, முடி உதிர்தல், எலும்பு பிரச்சினைகளை உண்டாக்க வாய்ப்பு உள்ளது. இது நம்முடைய கல்லீரல் செயல்பாட்டை பாதிக்கும். நம்முடைய வளர்ச்சிதை மாற்றத்தில் விட்டமின் டி மிக முக்கியமான பங்கு வகிக்கிறது. இத்தகைய நன்மைகளைத் தரும் விட்டமின் டி பற்றாக்குறையை எப்படி போக்கலாம் என ஆயுர்வேதம் சில வழிகளை நமக்கு கூறுகிறது.
விட்டமின் டி பற்றாக்குறை இருப்பவர்கள் எப்படி விட்டமின் டியை பெறலாம் என அறிவோம்.
விட்டமின் டி பற்றாக்குறையால் ஏற்படும் பெரிய பிரச்சினை முடி உதிர்வு. விட்டமின் டி பற்றாக்குறை இருப்பவர்களுக்கு முடி உதிர்வு பிரச்சினை ஏற்படும். அதேமாதிரி எலும்பு பலவீனம் மற்றும் எலும்பு முறிவு போன்றவற்றை சந்திக்கின்றனர்.
தாது பொதுவாக உடலில் உள்ள திசுக்களுடன் இணைக்கப்படுகிறது. இவை தான் உடலின் கட்டமைக்கு முதன்மையான விஷயம் ஆகும். இதில் ஏழு தாதுக்களில் ஆஸ்தி தாது(எலும்பு) உடலுக்கு உறுதியான வடிவமைப்பை தருகிறது. நிலம் மற்றும் காற்று இவற்றை அடிப்படையாகக் கொண்டு ஆஸ்தி தாது ஆரோக்கியத்தை மேம்படுத்த முடியும்.
விட்டமின் டியை பெருவதில் சூரியக் கதிர்கள் மிக முக்கியமான பங்கு வகிக்கிறது. இது எப்படி நடக்கிறது என்றால் சருமத்தில் காணப்படும் 7-டீஹைட்ரோகொலஸ்டிரால், சூரிய ஒளியில் இருந்து வரும் புற ஊதா பி ஒளியுடன் இணைந்து உடலில் வைட்டமின் டியை உற்பத்தி செய்கிறது. ஆயுர்வேதத்தின் படி விட்டமின் டி சத்தை பெற மற்றொரு வழி வளமான பால் உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள். அதே நேரத்தில் விட்டமின் டியை பெற கல்லீரல் ஆரோக்கியமும் முக்கியம். ஏனெனில் கல்லீரல் தான் விட்டமின் டி3யை விட்டமின் டியாக மாற்றுகிறது. விட்டமின் டி கொழுப்பில் கரையக்கூடிய விட்டமின் ஆகும். இந்த கொழுப்பில் கரையக்கூடிய விட்டமின்கள் எலும்பு ஆரோக்கியம், நோயெதிர்ப்பு சக்தி மற்றும் இரத்தம் உறைதல் செயல்பாட்டிற்கு உதவுகிறது.


No comments:

Post a Comment