இந்த உணவுகளை அதிகமா சாப்பிட்டா தலையில் பொடுகு வரவே வராதாம்...
தலையில் இருக்கும் பொடுகு ஒரு தொல்லை சார்ந்த விஷயமாகும். இது ஏகப்பட்ட முடி பிரச்சினைகளை உண்டாக்குகிறது. தலையில் உள்ள சருமம் வறண்டு போய் செதில் செதிலாக உதிர்வது தான் பொடுகாகும். இந்த பொடுகு அதிகப்படியாகும் போது உங்க தலையணைகள், உடைகள் இவற்றில் உதிர்ந்து உங்களுக்கு பிரச்சினைகளை உண்டாக்க வாய்ப்பு உள்ளது. உண்மையில் இந்த பொடுகு தலை சருமம் வறண்டு போதல் அல்லது எண்ணெய் சருமம் காரணமாக மட்டும் ஏற்படாது.
சொரியாஸிஸ், மன அழுத்தம் போன்ற காரணங்களாலும் பொடுகுத் தொல்லை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. பொதுவாக தலையில் இருக்கும் பொடுகுத் தொல்லையை போக்க நாம் ஷாம்பு, எண்ணெய் சில வீட்டு வைத்திய முறைகளை நாடுவதுண்டு. ஆனால் இந்த மாதிரியான முறைகள் வெளியில் இருந்து வேலை செய்து பொடுகுத் தொல்லையை போக்கும். பிறகு இந்த வீட்டு வைத்திய முறைகளை கைவிடும் போது மறுபடியும் பொடுகுத் தொல்லை உண்டாக வாய்ப்புள்ளது. எனவே உங்க தலைச் சருமம் ஆரோக்கியத்திற்கு உள்ளிருந்து போஷாக்கு அளிப்பது அவசியம். அது மட்டும் தான் உங்க பொடுகுத் தொல்லையை போக்க உதவி செய்யும். பொடுகுத் தொல்லையை போக்க கீழ்க்கண்ட உணவுகளை உங்க உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

நமது உச்சந்தலையில் இயற்கையாகவே எண்ணெய் ஆனது சுரக்கப்படுகிறது. இந்த அதிகப்படியான எண்ணெய் சுரப்பால் பொடுகு ஏற்படலாம். எனவே இந்த மாதிரியான பொடுகுத் தொல்லையை போக்க ஜிங்க் மற்றும் பயோட்டின் நிறைந்த உணவுகள் கை கொடுக்கும். இதன் மூலம் உச்சந்தலையில் ஏற்படும் அரிப்பு மற்றும் உலர்ந்த சருமத்தில் இருந்து விடுபட முடியும். சரியான செரிமான செயல்பாட்டிற்கும், பொடுகுத் தன்மையை மேம்படுத்துவதற்கு ஜிங்க், பயோட்டின், விட்டமின் பி போன்றவை தேவைப்படுகிறது. முட்டை, தயிர், தக்காளி மற்றும் கேரட் போன்றவற்றில் பயோட்டின் காணப்படுகிறது. அதே மாதிரி சிப்பிகள், பூசணி விதைகள், வேர்க்கடலை மற்றும் டார்க் சாக்லேட்டுகள் ஆகியவற்றில் ஜிங்க் காணப்படுகிறது.
No comments:
Post a Comment