AGE REDUCTION TIPS 30 வயசானாலும் சும்மா கும்மு-ன்னு இளமையா காட்சியளிக்கணுமா? இதோ சில டிப்ஸ்... - Health Tips & Hair Tips

Latest Health Tips and Hair tips

Monday, 26 July 2021

AGE REDUCTION TIPS 30 வயசானாலும் சும்மா கும்மு-ன்னு இளமையா காட்சியளிக்கணுமா? இதோ சில டிப்ஸ்...

30 வயசானாலும் சும்மா கும்மு-ன்னு இளமையா காட்சியளிக்கணுமா? இதோ சில டிப்ஸ்..

கற்றாழை ஜெல்


நம்ம எல்லாருக்குமே வயசு அதிகரிச்சாலும் இளமையாக காட்சியளிக்கணும் என்ற எண்ணம் நிச்சயம் மனதில் இருக்கும். அதற்காக கடைகளில் விற்கப்படும் பல அழகு சாதனப் பொருட்களால் சருமத்திற்கு பராமரிப்புக்களைக் கொடுத்து வருவோம். ஆனால் என்ன தான் கெமிக்கல் கலந்த பொருட்களால் சருமத்திற்கு பராமரிப்புக்களைக் கொடுத்தாலும், கெமிக்கல் சரும செல்களின் ஆரோக்கியத்தைப் பாதித்து, சருமத்தை மேலும் மோசமானதாக மாற்றும். எனவே உங்கள் அழகு வாழ்நாள் முழுவதும் நீடித்து இருக்க வேண்டுமானால், இயற்கை பொருட்களால் சருமத்திற்கு பராமரிப்பு கொடுப்பதே சிறந்தது. இதனால் சரும செல்கள் ஆரோக்கியமாக இருப்பதோடு, நீண்ட நாட்கள் பொலிவோடும், இளமையோடும் காட்சியளிக்கலாம்.


முந்தைய காலத்தில் அழகாக இருப்பதற்கு ஒருசில பொருட்களைக் கொண்டு சருமத்திற்கு பராமரிப்புக்களைக் கொடுத்து வந்தார்கள். அந்த பொருட்கள் இன்றும் பெரும்பாலான மக்களின் அழகு பராமரிப்புக்களில் இடம் பெற்றுள்ளன. நீங்கள் இதுவரை உங்கள் சருமத்திற்கு கடைகளில் விற்கப்படும் கெமிக்கல் நிறைந்த ஃபேஸ் மாஸ்க்குகளைப் பயன்படுத்தி இருந்தால், இனிமேல் அதைத் தவிர்த்து கீழே கொடுக்கப்பட்டுள்ள ஒருசில பொருட்களால் சருமத்திற்கு பராமரிப்பு கொடுத்து வாருங்கள். இந்த பொருட்கள் அழகைப் பேண மற்றும் பாதுகாக்க நினைக்கும் ஒவ்வொருவரும் எப்போதும் மறக்கக்கூடாத பொருட்களாகும். வாருங்கள் அவை என்னவென்பதைப் பார்ப்போம்.


சருமம் மற்றும் தலைமுடி சம்பந்தமான பிரச்சனைகளுக்கும் தீர்வளிக்கக்கூடிய ஒரு சிறப்பான பொருள் தான் கற்றாழை ஜெல். இந்த ஒரு பொருள் முகத்தில் உள்ள கருமையான தழும்புகள், சரும வறட்சி, பொலிவிழந்த சருமம் போன்ற பலவற்றை போக்கக்கூடியது. சொல்லப்போனால், கடைகளில் விற்கப்படும் பெரும்பாலான அழகு சாதன பொருட்களில் பயன்படுத்தப்படும் முதன்மையான மற்றும் முக்கியமான பொருளும் இதுவே. அப்படிப்பட்ட கற்றாழையின் ஜெல்லை தினமும் முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து கழுவி வந்தால், முகம் பொலிவோடும் இளமையோடும் காட்சியளிக்கும்.

பல்வேறு சரும பிரச்சனைகளை சரிசெய்ய பெட்ரோலியம் ஜெல்லி பயன்படுத்தப்படுகிறது. சொல்லப்போனால், லிப் பாம் இல்லாத நிலையில் பலர் தங்களின் உதடு வெடிப்புகளுக்கு பயன்படுத்தும் ஒரு முதன்மையான பொருள் இதுவே. உங்கள் உதடுகள் அடிக்கடி வறண்டு போகிறதா? அப்படியானால் பெட்ரோலியம் ஜெல்லியை உதடுகளில் தடவிக் கொள்ளுங்கள். இதனால் நாள் முழுவதும் உதடுகள் வறட்சியடையாமல் ஈரப்பதத்துடன் இருக்கும். அதேப் போல் உங்கள் கைகள் அதிக வறட்சியுடன் காணப்பட்டால், அப்போது பெட்ரோலியம் ஜெல்லியை பயன்படுத்திக் கொள்ளலாம்.

தற்போது உலகெங்கிலும் முகப்பொலிவை அதிகரிக்க ஃபேஸ் பேக்குகள் போடுவது டிரெண்ட்டாக உள்ளது. மார்கெட்டுகளில் ஏராளமான ஃபேஸ் பேக்குகள் விற்கப்படுகின்றன. இருப்பினும், எப்போதுமே பயன் தரக்கூடிய ஒரு சிறப்பான ஓர் ஃபேஸ் பேக் பொருள் என்றால் அது முல்தானி மெட்டி தான். இதில் கனிமச்சத்துக்களும், எண்ணெய்களும் அதிகமாக நிறைந்துள்ளதால், இது சரும செல்களுக்கு ஊட்டமளிப்பதோடு, சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் பசையை நீக்கி, சருமத்துளைகளின் ஆழத்தில் உள்ள அழுக்குகளையும் எளிதில் வெளியேற்றி, முகத்தைப் பொலிவோடு காட்டும்.

No comments:

Post a Comment