Banyan tree benefits ( வாழை மரம்)
வாழை மரம்
இறை பூஜையில் நைவேத்திய பொருட்களை வாழை இலையில்தான் வைக்கிறோம். தினமும் வாழை இலையில் உணவு உட்கொண்டு வந்தால் மேனி பளபளப்பாகும். மந்தம், வன்மைக் குறைவு, இளைப்பு போன்றவை நீங்குவதுடன் பித்தம் தணியும்.
* வாழைப் பூவில் வைட்டமின் 'பி' அதிகம் உள்ளது. எனவே இதை அடிக்கடி சமைத்து உட்கொண்டால் பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் வயிற்று வலி மற்றும் குடல் புண், ரத்தபேதி, மூலநோய் ஆகியவை குணமாகும்.
*வாழைத் தண்டு சாற்றுக்கு சிறுநீரை பெருக்கும் தன்மை உண்டு. எனவே இதை நீர்ச் சுருக்கு, எரிச்சல் போன்றவை தீர் அருந்தி வரலாம். மேலும் தேவையற்ற உடல் பருமனையும் இது குறைக்கும். இதை உலர்த்தி பொடியாக்கி தேன் கலந்து சாப்பிட்டு வர காமாலை நோய் குணமாவதுடன் கல்லீரல் வலுவடையும்.
*வாழை பிஞ்சு & காயினால் ரத்த மூலம், ரத்தக்கடுப்பு, வயிற்றுப் புண், நீரிழிவு நோய் நீங்குவதுடன் உமிழ்நீர் அதிகம் கரத்தல், வயிறுளைச்சல், உடல் வெப்பம், இருமல் தணியும்.
No comments:
Post a Comment