best-ways-to-naturally-whiten-yellow-teeth-at-home- உங்க பல் அசிங்கமா மஞ்சள் நிறத்தில் இருக்கா? இதோ அதை வெள்ளையாக்கும் சக்தி வாய்ந்த வழிகள்! - Health Tips & Hair Tips

Latest Health Tips and Hair tips

Wednesday, 21 July 2021

best-ways-to-naturally-whiten-yellow-teeth-at-home- உங்க பல் அசிங்கமா மஞ்சள் நிறத்தில் இருக்கா? இதோ அதை வெள்ளையாக்கும் சக்தி வாய்ந்த வழிகள்!

உங்க பல் அசிங்கமா மஞ்சள் நிறத்தில் இருக்கா? இதோ அதை வெள்ளையாக்கும் சக்தி வாய்ந்த வழிகள்!

சாம்பல்

நம் அனைவருக்குமே நல்ல வெள்ளையான முத்துப் போன்ற பற்கள் வேண்டுமென்ற ஆசை இருக்கும். துரதிர்ஷ்டவசமாக அந்த பாக்கியம் பலருக்கு கிடைப்பதில்லை. இதற்கு காரணம் உண்ணும் சில உணவுகளும், புகைப்பழம் போன்ற கெட்ட பழக்கங்களும், முறையான பராமரிப்புக்களை பற்களுக்கு கொடுக்காமல் இருப்பதும் தான். ஆனால் பற்களில் உள்ள மஞ்சள் கறைகளை போக்க பல இயற்கை வழிகள் உள்ளன.

அதுவும் நம் முன்னோர்கள் மேற்கொண்ட எளிய வழிகள் உள்ளன. அதற்கு வீட்டில் உள்ள ஒருசில பொருட்களே போதுமானது. உங்களுக்கு மஞ்சள் நிற பற்களை வெள்ளையாக்கும் சக்தி வாய்ந்த இயற்கை வழிகளைத் தெரிந்து கொள்ள வேண்டுமானால் தொடர்ந்து படியுங்கள்.

சாம்பல்

 பற்களில் உள்ள மஞ்சள் கறைகளைப் போக்கும் திறன் சாம்பலுக்கு உள்ளது. நம் முன்னோர்கள் முந்தைய காலத்தில் சாம்பலைக் கொண்டு பற்களைத் துலக்கினார்கள். சாம்பல் எளிதில் கிடைக்கக்கூடிய பொருள் என்பதால், நீங்களும் இதை முயற்சிக்கலாம். ஒருவேளை சாம்பல் கிடைக்காவிட்டால், கடைகளில் விற்கப்படும் சாம்பல் மாத்திரையின் உள்ளே உள்ள பொடியைப் பயன்படுத்தலாம். அதற்கு செய்ய வேண்டியதெல்லாம், சாம்பலை ஈரமான டூத் பிரஷ்ஷில் நனைத்து, பற்களை வழக்கம் போல துலக்க வேண்டும்.

பால் பவுடர் மற்றும் டூத் பேஸ்ட் 

பால் பவுடர் பற்களை முத்துப் போன்ற நிறத்தில் மாற்ற உதவுவதோடு, ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ளும். அதற்கு டூத் பிரஷ்ஷில் டூத் பேஸ்ட்டை வைத்து, அதன் மேல் சிறிது பால் பவுடரைத் தூவி பற்களைத் துலக்க வேண்டும். இப்படி வாரத்திற்கு ஒன்று முதல் இரண்டு முறை பற்களைத் துலக்க, பற்களில் உள்ள மஞ்சள் கறைகள் நீங்கி, பற்கள் வெள்ளையாக இருக்கும்.


No comments:

Post a Comment