உடல் அசதி நீங்கி சுறுசுறுப்பாக இயங்க உதவும் சுக்கு !! - Health Tips & Hair Tips

Latest Health Tips and Hair tips

Tuesday, 20 July 2021

உடல் அசதி நீங்கி சுறுசுறுப்பாக இயங்க உதவும் சுக்கு !!

உடல் அசதி நீங்கி சுறுசுறுப்பாக இயங்க உதவும் சுக்கு !!


Ginger

தினமும் சுக்கு காபி குடித்து வந்தால் இருமல் தொல்லையிலிருந்து விடுபடலாம். சிறிதளவு சுக்கு பொடியுடன் உப்பு சேர்த்து பல் துலக்கி வந்தால் வாய் தூர்நாற்றமும், பல் கூச்சமும் நீங்கும்.

ஓரு டம்ளர் நீர் எடுத்து, அதனுடன் சுக்குப்பொடி சேர்த்து, வடிகட்டி குடித்து வந்தால் தொப்பையின் அளவு குறைந்து உடல் சீரான தோற்றத்தையும் பெறும் ]


வெது வெதுப்பான பாலில் சுக்கு தூளையும், நாட்டு சக்கரையும், சேர்த்து குடித்து வந்தால் சிறுநீரக நோய் தொற்றானது நீங்கும். தொண்டை கட்டு குணமாக, சுக்கு,  மிளகு, சுண்ணாம்பு சேர்த்து மையாக அரைத்து, தொண்டையில் பூச குணம் கிடைக்கும். 
 
சுக்கு, மிளகு, சீரகம், இட்டு எண்ணெய் காய்ச்சி தலைக்கு சேத்து வர தலையில் உள்ள நீர்கோவை நீங்கும். ஈர், பேன் அழியும். சுக்கை பொடித்து கருப்பட்டி சேர்த்து  காய்ச்சி குடித்து வந்தால் உடல் அசதி, உடல் வலி, இருமல், சளி நீங்கும், உடல் பலம் பெறும்.
 
தயிருடன் சுக்கு பொடி சேர்த்து சாப்பிட்டு வந்தால் வயிற்றுப்புண் குணமாகும். சுக்குடன் சிறிது துளசி இலை சேர்த்து, மென்று வந்தால் வாந்தி, குமட்டல் நீங்கும்.
 
அலர்ஜி பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் சுக்குடன் வெந்தயம் சேர்த்து பொடியாக்கி தேன் கலந்து, உண்டு வந்தால் அலர்ஜி சரியாகும். சுக்கு, மிளகு, கருப்பட்டி சேர்த்து உண்டு வந்தால் உடல் அசதி நீங்கி உடல் சுறுசுறுப்பாக இயங்கும். 

No comments:

Post a Comment