கொரோனாவால் தலைமுடி ரொம்ப கொட்டுதா? இதோ அதைத் தடுக்கும் சில வழிகள்!

ஆண்கள் மற்றும் பெண்கள் என இருவருமே சந்திக்கும் மிகவும் பொதுவான பிரச்சனை தான் தலைமுடி உதிர்வு. தலைமுடி பிரச்சனைகளானது நாம் உண்ணும் உணவு, வாழ்க்கை முறை மற்றும் பிற ஆரோக்கிய பிரச்சனைகளுடன் நேரடி தொடர்புடையவை. மேலும் இது ஒருவர் அதிக மன அழுத்தத்தில் இருப்பதன் அறிகுறியாகவும் இருக்கலாம். கொரோனா பெருந்தொற்று பரவ ஆரம்பித்த பின், ஏராளமானோர் தலைமுடி உதிரும் பிரச்சனையை அதிகம் சந்திக்கிறார்கள். முக்கியமாக கொரோனாவில் இருந்து மீண்ட நோயாளிகள் பலர், தங்களுக்கு தலைமுடி அதிகமாக கொட்டுவதாக புகாரளிக்கிறார்கள்.
ஆகவே தமிழ் போல்ட்ஸ்கை தலைமுடி உதிர்வதைத் தடுக்கும் சில எளிய வீட்டு வைத்தியங்களை கீழே கொடுத்துள்ளது. இந்த வைத்தியங்களை பின்பற்றினால், தலைமுடி கொட்டும் பிரச்சனையில் இருந்து விடுபடலாம். சரி வாருங்கள், அந்த வைத்தியங்கள் என்னவென்பதைப் பார்ப்போம்.
தேங்காய் எண்ணெய் தேங்காய் எண்ணெயில் உள்ள பொட்டாசியம் மற்றும் இரும்புச்சத்து, தலைமுடியின் வளர்ச்சிக்கு உதவுவதோடு, தலைமுடி உதிர்வதையும் குறைக்கும். அதற்கு தேங்காய் எண்ணெயை வெதுவெதுப்பாக சூடேற்றி தலையில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்ய வேண்டும். பின் ஒரு மணிநேரம் கழித்தோ அல்லது ஒரு இரவு முழுவதும் ஊற வைத்த பின்போ தலைமுடியை அலசலாம்.
No comments:
Post a Comment