Cup Of Coffee Could Raise The Risk Of Dementia In Tamil காபி நிறைய குடிக்கறதுக்கும் டிமென்ஷியா நோய்க்கும் தொடர்பு இருக்கிறதா?... - Health Tips & Hair Tips

Latest Health Tips and Hair tips

Saturday, 31 July 2021

Cup Of Coffee Could Raise The Risk Of Dementia In Tamil காபி நிறைய குடிக்கறதுக்கும் டிமென்ஷியா நோய்க்கும் தொடர்பு இருக்கிறதா?...

காபி நிறைய குடிக்கறதுக்கும் டிமென்ஷியா நோய்க்கும் தொடர்பு இருக்கிறதா?...




பெரும்பாலும் நாம் நம்முடைய காலைப் பொழுதை காபியுடன் தான் துவங்குவோம். இன்னும் சிலருக்கு காலை வேளையில் காபி எடுத்துக் கொள்ளவில்லை என்றால் அந்த நாள் சரியாகப் போகவில்லை என்று கூட தோன்றும். தினசரி நாம் எடுத்துக் கொள்ளும் காபியால் ஏற்படும் மிக முக்கியமான பிரச்சனை பற்றி பார்க்கலாம் வாங்க.

காபி பிடிக்கும் என்று சொல்பவர்களை விட நான் காபிக்கு அடிமை என்று சொல்பவர்களை நாம் பார்த்திருப்போம். அவர்களால் காபி இல்லாமல் இருக்கவே முடியாது. சோகமாக இருந்தாலும் காபி, சந்தோஷமாக இருந்தாலும் காபி என்று தான் அவர்களின் உணர்வுகள் இருக்கும். காபியை ஒரு உணர்ச்சிகரமான விஷயமாகவே பலர் பார்க்கின்றனர். காலை நேர சுறுசுறுப்புக்கு காபி தான் காரணம் என்றும் காபி பிரியர்கள் கூறுகின்றனர். அப்படிப்பட்ட காபி உங்களின் அறிவாற்றலுக்கு எதிராக செயல்படும் என்பது உங்களுக்குத் தெரியுமா...? ஆம், ஒரு நாளைக்கு ஆறு கப் காபிக்கு மேல் குடிப்பர்களுக்கு 53 சதவீதம் டிமென்ஷியா ஆபத்து அதிகரிக்கும் என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது.

டிமென்ஷியா என்பது மூளையின் சீரற்ற நிலை ஆகும். இது உங்களின் நினைவகம், சிந்தனை, நடத்தை மற்றும் அன்றாடப் பணிகளை பாதிக்கும். உலக அளவில் சுமார் 50 மில்லியன் மக்களுக்கும் மேல் இந்த டிமென்ஷியா நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆஸ்திரேலியாவில் ஏற்படும் மரணங்களுக்கு டிமென்ஷியா முக்கிய காரணமாக உள்ளது. அதுமட்டுமின்றி, ஆஸ்திரேலியாவில் ஒவ்வொரு நாளும் 250- க்கும் மேற்பட்டோர் இந்த நோயால் பாதிக்கப்பட்டு வருவது கண்டறியப்பட்டுள்ளது.
தெற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழகத்தில் அதிக அளவு காபி குடிப்பது பற்றி புதிய ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில், காபி மூளை ஆரோக்கியத்தைக் கெடுக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது. அதிக அளவு காபி அருந்துவது, மூளை அளவுகளுடன் தொடர்புடையது. அதோடு காபி அருந்துவது டிமென்ஷியா என்னும் ஞாபக மறதி நோயை அதிகரிக்கும் அபாயம் உள்ளது என்றும் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். இதுகுறித்த ஆய்வின் தகவல்கள் ‘ஊட்டச்சத்து நரம்பியல்’ என்னும் இதழில் வெளியிடப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment