க்ரீன் டீயுடன் துளசி சேர்த்து குடிப்பதால் என்னென்ன நன்மைகள் உண்டாகும்...
துளசி ஆயுர்வேதத்தில் பல்வேறு நோய்களைத் தீர்க்கும் முக்கிய மருந்தாக இருக்கிறது. அதேபோன்று க்ரீன் டீ கெட்ட கொழுப்பை கரைக்கும். ரத்த சர்க்கரையை கட்டுக்குள் வைத்திருக்கும். குறிப்பாக, உடலில் உள்ள தேவையற்ற கழிவுகளை வெளியேற்றும் ஆற்றல் கொண்டது.
சாதாரணமாக குடிக்கும் பிளாக் டீ மற்றும் பால் சேர்த்த டீயல் துளசி சேர்த்து பருகுவதுண்டு. ஆனால் க்ரீன் டீயில் மற்றொரு பச்சிலையான துளசியை சேர்த்துக் குடிக்கலாமா, குடித்தால் என்ன ஆகும், நல்ல பலன்கள் என்னென்ன, பக்க விளைவுகள் ஏதேனும் உண்டாகுமா என்பது குறித்து இங்கே விளக்கமாகப் பார்க்கலாம்.
பெருந்தொற்று காலத்தில் நாம் மிகவும் பத்திரமாகப் பார்த்துக் கொள்ள வேண்டியது நம்முடைய நுரையீரலைத் தான். அதற்கு மிகச்சிறந்த தீர்வாக இந்த துளசி-க்ரீன் டீ இருக்கும். ஆஸ்துமா, நீண்ட நாள் மார்புச்சளி, ஆகிய பிரச்சினைகள் குறையும். அதோடு சுவாசப் பாதையில் ஏற்படும் வைரஸ், பாக்டீரியாக்கள் மற்றும் பூஞ்சைகளால் ஏற்படும் தொற்றுக்களையும் அழிக்கும் வல்லமை கொண்டது.

No comments:
Post a Comment