CYNUS சைனஸ் பிரச்சினையை தீர்க்கும் நல்லவேளை மூலிகை !! - Health Tips & Hair Tips

Latest Health Tips and Hair tips

Friday, 23 July 2021

CYNUS சைனஸ் பிரச்சினையை தீர்க்கும் நல்லவேளை மூலிகை !!

சைனஸ் பிரச்சினையை தீர்க்கும் நல்லவேளை மூலிகை !!

Nal Velai
நல்லவேளை மூலிகைக்கு வேளைச்செடி, நல்வேளை, தைவேளை என்ற வேறு சில பெயர்களும் உண்டு. கிராமம், நகரம் என்றில்லாமல் எல்லா இடங்களிலும்  வளரக்கூடியது.

வெள்ளை நிறப் பூக்களைக் கொண்டிருக்கும் இதில் சூல்கள் நிறைந்து காணப்படும். ஆனால், இந்த செடியை அடையாளம் காண்பதில்தான் பலருக்கு குழப்பம்  இருக்கிறது. கீரை விற்கும் பாட்டிகள் கலவைக்கீரை என்ற பெயரில் கீரை விற்பார்கள். அந்தக் கலவைக்கீரையில் சில நேரங்களில் வேளைக்கீரையும்  இடம்பெறுவதுண்டு.கபம், வாதம்: வேளைப்பூவுடன் தூதுவேளைப்பூ சேர்த்து நெய்விட்டு வதக்கி துவையலாகச் செய்து சாப்பிடலாம். இப்படிச் சாப்பிடுவதால் நெஞ்சில் கட்டியிருக்கும்  கபம் மற்றும் வாதம் சமநிலை அடையும். 
 
வேளைச் செடியின் இலைகளை நீர் விட்டுக் கொதிக்க வைத்து மோரில் ஊறவைத்து ஊட்டச்சத்துப் பானமாக அருந்தினால் சளித்தொல்லை, வாதக்கோளாறுகள் வராமல் பார்த்துக் கொள்ளலாம்.
 
வேளைக்கீரையுடன் குடைமிளகாய், பூண்டு சம அளவு சேர்த்து அரைத்து துவையல் செய்து சாப்பிடலாம். இதனால் உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்புகள்  கரைந்துவிடும்.
 
தலைவலி, சைனஸ்: நல்லவேளை இலைச் சாற்றை தேங்காய் எண்ணெயுடன் சேர்த்துக் காய்ச்சி, ஆறாத புண்களின் மீது தடவினால் புண் சீக்கிரம் ஆறும். வேர் முதல் பூ வரையிலான முழு தாவரத்தையும் வெள்ளைப் பூண்டு சேர்த்துக் காய்ச்சி நாள்பட்ட தோல் நோய்களின்மீது பூசினால் குணமாகும்.
 
நல்லவேளைச் செடியின் முழுச் செடியையும் இடித்துப் பிழிந்து சாறு எடுத்து அதனுடன் பால், நாட்டுச் சர்க்கரை கலந்து குடித்தால் சைனஸ் விலகும். இதன்  விதைகளை இடித்துப் பொடியாக்கி விளக்கெண்ணெய் சேர்த்துக் குடித்தால் வயிற்றுப் புழுக்கள் மலத்துடன் சேர்ந்து வெளியாகும்.

No comments:

Post a Comment