இதயம் சம்பந்தமான நோய்கள் வராமல் உதவும் சீதாப்பழம் !!
சீதா பழத்தில் உள்ள பல்வேறு ஊட்டச்சத்துக்களும், கனிமச்சத்துக்களும் நம் உடலுக்கு பல நன்மைகளை அள்ளித்தருகிறது. சீதாப் பழத்தில் உள்ள மெக்னீசியம் இதய நோய், மாரடைப்பு ஏற்படாமல் நம்மை பாதுகாக்கிறது.
சீதாப்பழம் இரத்த விருத்தியை அதிகபடுத்தி இரத்த சோகையை குணப்படுத்துகிறது. இப்பழத்தில் உள்ள குளுக்கோஸ் உடல் சோர்வை அகற்றி உடலை சுறுசுறுப்புடன் வைத்திருக்க உதவுகிறது.நினைவாற்றலை அதிகரிக்கும் தன்மை சீதாப்பழத்திற்கு உண்டு. சீதாபழத்தில் நம் உடலுக்கு தேவையான அனைத்து வைட்டமின்கள், புரதம், தாதுப் பொருட்கள், நல்ல கொழுப்புச் சத்து, நார்ச்சத்து என அனைத்து சத்துக்களும் நிறைந்து உள்ளது.
சீதாப் பழத்தில் உள்ள வைட்டமின் பி மூச்சுக்குழாயில் ஏற்படும் பாதிப்பை குறைத்து ஆஸ்துமா போன்ற சுவாச பிரச்சனை ஏற்படாமல் பாதுகாக்கிறது.
சீதாப் பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வருவதால் ஜீரண கோளறு போன்ற பாதிப்புகள் ஏற்படாது. பித்தம், வாந்தி, பேதி, தலைசுற்றல் போன்றவையும் ஏற்படாது.
சீதாப் பழத்திலுள்ள பல சத்துக்கள் இதயத்தைப் பலப்படுத்தி, சீராக இயங்கச் செய்யும். இதயம் சம்பந்தமான நோய்கள் வராமல் இதயத்தை பாதுகாக்கும்.
சிறுநீர் பிரச்சனையால் அவதிப்படுபவர்கள், சீதாப்பழச் சாறுடன், சிறிது எலுமிச்சம் பழச்சாறு கலந்து பருகினால், சிறுநீர் தாராளமாகப் பிரியும். நீர்க்கடுப்பும் நீங்கும். உடம்பு ஊளைச்சதை உள்ளவர்கள் தொடர்ந்து சீதாப்பழம் சாப்பிட்டு வர, ஊளைச்சதை வெகுவாக குறையும்.
சீதாபழம் உடல் சூட்டை குறைத்து உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க உதவுகிறது.உஷ்ணத்தால் ஏற்படும் மாந்தத்தைக் குணப்படுத்தும் தன்மை இப்பழத்திற்கு உண்டு.
No comments:
Post a Comment