பலன் தரும் பப்பாளி பக்கவிளைவும் தரும், யாரெல்லாம் கவனமாக இருக்க வேண்டும்!
பப்பாளிப்பழம் சாலட் ஆகவோ சிற்றுண்டியாகவோ எடுத்துகொள்வது உண்டு. பப்பாளி பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் பூஞ்சை காளான் பண்புகளை கொண்டுள்ளது. பப்பாளி இலைகளின் சாறு, டெங்கு காய்ச்சலை எதிர்த்து போராடுவதற்கும் பிளேட்லெட் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கும் பயன்படுத்தப்படுகிறது.
பப்பாளி எடுத்துகொள்வது பக்கவிளைவுகள் இல்லை. ஆனால் அதிகமாக எடுக்கும் போது, கர்ப்பத்தை அபாயப்படுத்துவது முதல் உணவுக்குழாயை தடுப்பது வரை சமயங்களில் இவை பாதிப்பை உண்டாக்கிவிடலாம். பப்பாளிப்பழத்தின் பக்கவிளைவுகளையும் இங்கு தெரிந்துகொள்வோம்.பப்பாளி குறைந்த கலோரி கொண்டுள்ளது. ஆரோக்கியமான நன்மைகளை வழங்குகிறது. ஹீலிங் புட்ஸ் புத்தகத்தின் படி, இது பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளை கொண்டிருப்பதாகவும் நல்ல செரிமானத்தை ஊக்குவிப்பதாகவும் அறியப்படுகிறது. பப்பாளி தாவரத்தின் ஒவ்வொரு பகுதியையும் எடுத்துகொள்ளலாம்.
கண்களை பாதுகாக்க உதவும் பீட்டா கரோட்டின் போன்ற ஆக்ஸிஜனேற்ற கரோட்டினாய்டுகளின் நல்ல மூலமாகும். பப்பாளி இலைகள் டெங்கு காய்ச்சலுக்கு எதிராக பயனுள்ளதாக காணப்படுகின்றன.
நார்ச்சத்து அதிகம் உள்ள இது மலச்சிக்கல் போன்ற நிலைமைகளுக்கு வழிவகுக்கும். அதிகப்படியாக எடுத்துகொண்டால் சில பக்கவிளைவுகளை உண்டாக்குகிறது. அப்படியான பக்கவிளைவுகள் குறித்து தெரிந்து கொள்வதன் மூலம் நீங்கள் பப்பாளி சாப்பிடுவதில் கவனமாக இருக்க வேண்டும். அதோடு இந்த பக்க விளைவுகள் எல்லோருக்கும் மாறுபடாது.
கர்ப்பிணிக்கு பிறப்பு குறைபாடு ஏற்படுத்தும்
பப்பாளி இலைகளில் பப்பேன் எனப்படும் கூறு உள்ளது. நீங்கள் கர்ப்பமாக இருந்தால் உங்கள் குழந்தைக்கு நச்சுத்தன்மையளிக்க்உம் . இது பிறப்பு குறைபாடுகளுக்கும் வழிவகுக்கும்.
No comments:
Post a Comment