தினமும் நாக்கை ஏன் சுத்தம் செய்ய வேண்டும்?... அதனால் இத்தனை நன்மைகள் இருக்கா...
வாய் சுகாதாரம் மிகவும் முக்கியமானது. யாராவது உங்களின் வாய் துர்நாற்றம் குறித்து கூறினால், நீங்கள் எவ்வளவு சங்கடமான உணர்வை பெறுவீர்கள் என்பது புரிகிறது. அதற்குத் தான் வாய்வழி சுகாதாரத்தை பராமரிப்பது மிகவும் முக்கியம். ஆனால், பெரும்பாலான மக்கள் பற்களை பராமரிப்பது மட்டுமே வாய் சுகாதாரம் என்று எண்ணுகின்றனர். நாக்கினை பற்றி யோசிக்க மறந்து விடுகின்றனர். ஆனால், நாக்கின் மூலமும் துர்நாற்றம் மற்றும் சில ஆரோக்கிய குறைப்பாடுகள் ஏற்படும்.
உங்கள் வாயில் உள்ள மோசமான பாக்டீரியாக்கள், உணவின் குப்பைகள் மற்றும் இறந்த செல்களை நீக்க நீங்கள் தினமும் நாக்கை சுத்தம் செய்வது முக்கியம். பாக்டீரியா, பூஞ்சை, இறந்த செல்கள் கூட உங்களின் வாய் துர்நாற்றத்துக்கு காரணமாக இருக்கும்.
நாக்கின் சுகாதாரத்தை பராமரிப்பதன் மூலம் உங்களுக்கு கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் பற்றித் தெரிந்து கொள்வோம் வாங்க.
ஒவ்வொரு நாளும் இரண்டு முறை நாக்கினை சுத்தம் செய்வதன் மூலம் உங்களின் சுவை உணர்வை மேம்படுத்தலாம். நாக்கை சுத்தம் செய்வதால் நாக்கில் உள்ள இறந்த செல்கள் மற்றும் பிற தேவையற்ற பொருட்கள் நீக்கப்படும். இதனால் நாக்கில் உள்ள சுவை மொட்டுகள், நீங்கள் உண்ணும் உணவின் சுவையை சிறந்ததாகக் காட்டும். அதேபோல், கசப்பு, இனிப்பு, உப்பு மற்றும் புளிப்பு உணர்வுகளை சிறப்பாக வேறுபடுத்திக் காட்டும்.
பல் சிதைவு மற்றும் வாய் துர்நாற்றத்துக்கு வழி செய்யும் கெட்ட பாக்டீரியாக்களை நாக்கை சுத்தப்படுத்துவதன் மூலம் நீக்க முடியும். அதேபோல் தினமும் நாக்கை சுத்தம் செய்வதால் உங்கள் வாயில் உள்ள நல்ல பாக்டீரியாக்களின் சமநிலையை பராமரிக்க முடியும்.
No comments:
Post a Comment