கரம் மசாலாவை ஏன் அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்?... அதனால் உடலில் ஏற்படும் மாற்றங்கள் என்ன...
மசாலா பொருட்களுக்கு புகழ் பெற்ற நாடுதான் இந்தியா. இங்கு ஒவ்வொரு வீட்டு சமையல் அறையிலும் பல்வேறு வகையான மசாலா பொருட்களை நாம் பார்க்க முடியும். அப்படி மக்கள் அடிப்படையாகப் பயன்படுத்தும் ஒரு மசாலாதான் கரம் மசாலா தூள். கரம் மசாலா தூளானது பல்வேறு மசாலா பொருட்களின் கலவையாக இருக்கிறது. இதனால் இது சைவம் அசைவம் என அனைத்து உணவுகளிலும் பயன்படுத்தப்படுகிறது.
கிராம்பு, இலவங்கபட்டை, சீரகம், ஏலக்காய், பிரியாணி இலை மற்றும் கருப்பு மிளகு இவற்றின் கலவையாக கரம் மசாலா உள்ளது. இந்திய உணவுகளில் சுவையையும் வாசனையையும் அதிகரிக்க முக்கிய பொருளாக கரம் மசாலா உள்ளது. ஆனால் உணவில் சுவையை சேர்ப்பதை தாண்டி இன்னும் பல விஷயங்களை கரம் மசாலா செய்கிறது. கரம் மசாலா பல தாதுக்களின் நன்மைகளை கொண்டுள்ளது. இது நமது உடல் ஆரோக்கியத்திற்கு பல வழிகளில் நன்மை பயக்கிறது.
செரிமானத்தை மேம்படுத்துவதில் கரம் மசாலா தூள் பல நன்மைகளை செய்கிறது. இது செரிமானத்தை எளிதாக்குகிறது. இந்த மசாலா வயிற்றில் இரைப்பையின் செயல்பாடுகளை மேம்படுத்துகிறது. மேலும் குடல் இயக்கத்திற்கு உதவுகிறது. செரிமானம் தொடர்பான பிரச்சனைகள், அசிடிட்டி, வீக்கம், அஜீரணம் போன்ற பிரச்சனைகளை சரி செய்கிறது.
No comments:
Post a Comment