Dos And Donts On Applying Lipsticks In Tamil லிப்ஸ்டிக் போடும் போது என்னென்ன செய்யலாம்... என்ன செய்யக் கூடாதுனு தெரியுமா... தெரிஞ்சிக்கோங்க... - Health Tips & Hair Tips

Latest Health Tips and Hair tips

Wednesday, 28 July 2021

Dos And Donts On Applying Lipsticks In Tamil லிப்ஸ்டிக் போடும் போது என்னென்ன செய்யலாம்... என்ன செய்யக் கூடாதுனு தெரியுமா... தெரிஞ்சிக்கோங்க...

லிப்ஸ்டிக் போடும் போது என்னென்ன செய்யலாம்... என்ன செய்யக் கூடாதுனு தெரியுமா... தெரிஞ்சிக்கோங்க...


நம் முகத்தை அழகாக்க மேக்கப் என்பது எவ்வளவு முக்கியமோ அதே மாதிரி நம் உதட்டை அழகாக்க லிப்ஸ்டிக் என்பது அவசியம். லிப்ஸ்டிக்கை நீங்கள் சரியாக தேர்ந்தெடுத்து அப்ளே செய்தாலே முகமானது அழகாக மாறி விடும். ஆனால் நம்மில் நிறைய பேர் தங்கள் உதடுக்கு ஏற்ற லிப்ஸ்டிக்கை தேர்ந்தெடுப்பதில்லை. மேலும் நிறைய பேருக்கு லிப்ஸ்டிக்கை எப்படி அப்ளே செய்ய வேண்டும், நீண்ட நேரம் அலையாமல் நிலைத்திருக்க என்ன செய்ய வேண்டும் போன்ற விஷயங்கள் தெரிவதில்லை.
சிலர் தங்கள் உதடுகள் ஆடம்பரமாக இருக்க விலையுயர்ந்த லிப்ஸ்டிக்கை தேர்ந்தெடுப்பது உண்டு. ஆனால் விலையுயர்ந்த லிப்ஸ்டிக்கை விட தரமான லிப்ஸ்டிக் தான் உங்களுக்கு அவசியம். சில வகை லிப்ஸ்டிக்கில் சேர்க்கப்படும் கெமிக்கல்கள் உங்க உதட்டை கருப்பாக மாற்றவும், விரிசலை உண்டாக்கவும் வாய்ப்பு உள்ளது. எனவே உதட்டின் நிறத்தை மாற்றாத அதே நேரத்தில் மென்மையான உதட்டை தரக்கூடிய லிப்ஸ்டிக்காக நாம் தேர்ந்தெடுக்க வேண்டும்.
அதற்காகத்தான் இந்த தேசிய லிப்ஸ்டிக் தினம் 2021, ஜூலை 29 ஆம் தேதி அன்று லிப்ஸ்டிக்கின் முக்கியத்துவம் பற்றியும் அதன் பயன்பாடு மற்றும் தேர்ந்தெடுக்கும் விதம் குறித்து அழகுக்கலை நிபுணர்கள் கருத்துக்களை தெரிவித்து உள்ளனர். அவர்கள் இது குறித்து என்ன கூறுகிறார்கள் என்றால் லிப்ஸ்டிக்கை சரியான முறையில் தேர்ந்தெடுப்பது, பயன்படுத்துவது மற்றும் செய்யக் கூடாத விஷயங்களை பற்றி அறிந்து இருப்பது உதடுகளில் ஏற்படும் ஒவ்வாமை போன்றவற்றை போக்க முடியும் என்கின்றனர்.
எனவே லிப்ஸ்டிக் போடும் போது என்னென்ன விஷயங்களை கருத்தில் கொள்ள வேண்டும் என தெரிந்து கொள்ளுங்கள்.

​உதடுகளை ஈரப்பதமாக வைக்க :
உங்க உதடுகளை நீங்கள் பராமரிக்க வேண்டும் என்று நினைத்தால் அதற்கான முதல் விஷயம் உங்க உதடுகளை ஈரப்பதமாக வைத்துக் கொள்ள வேண்டும். இதன் மூலம் உதடுகளில் உள்ள கருமையை போக்க முடியும். எனவே முதலில் லிப்ஸ்டிக் போடுவதற்கு முன்பு உங்க உதடுகளை ஈரப்பதமாக்க இயற்கையான லிப் பாம் பயன்படுத்துங்கள். இதற்கு தேங்காய் எண்ணெய் போன்ற இயற்கை லிப் பாமைக் கூட பயன்படுத்தலாம். இதனால் உங்க உதடுகள் வறண்டு போகாமல் பிளவுகள் இல்லாமல் இருக்கும்.

No comments:

Post a Comment