Ear care remedies (காது)
காது
மற்றவர்கள் எண்ணங்களை நாம் புரிந்து கொள்ள செவி முக்கியம். காது கேட்டால் தான் மற்றவர் பேசுவதை நாம் தெரிந்து கொள்ள முடியும். காதின் உள்ளே தேவையில்லாத பொருட்களை விடக்கூடாது. காதை குடையக் கூடாது. 'குத்திக் கெடுத்த பல்லும், குடைந்து கெடுத்த காதும்' என்பார்கள். காதில் அழுக்கு சேராமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
* காதின் உள்ள எறும்பு அல்லது பூச்சி புகுந்து விட்டால் வேப்பிலை சாற்றில் சிறிது உப்பைக் கலந்து சூடாக்கி சிலதுளிகள் உள்ளே விட்டால் அது இறந்து வெளியே வந்துவிடும்.
*ஒரு பெரிய மிளகாய் வத்தலில் உள்ள விதைகளை நீக்கி 3-4 துளி நல்லெண்ணயில் ஒரு கிராம்பை போட்டு சூடு செய்து அந்த எண்ணெயை வலியுள்ள காதில் இட்டால் காது வலி நீங்கும்.
*தாழம்பூவை நெருப்புத் தனலில் காட்டி கசக்கி சாறு பிழிந்து
அதில் சில துளிகள் காதில் விட காதுவலி, இரைச்சல், காதில்
தோன்றும் கட்டி ஆகியவை குணமாகும்.
* முருங்கையிலை, துளசி, மருதாணிவேர் இவைகளில் ஒன்றை நசுக்கி பிழிந்து அதன் சாற்றை காதில் விட்டால் காதுவலி குணமாகும்.
No comments:
Post a Comment